சென்னை, ஜன. 23- இந்தியப் பொருட்களின் மீது 500 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கையை எதிர்த் தும், இதனைத் தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே நேற்று (22.1.2026) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெ. சண்முகம் – மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஅய் எம் மு. வீரபாண்டியன் – மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பழ. ஆசைத்தம்பி – மாநிலச் செயலாளர், சிபிஅய் (எம்.எல்.) லிபரேசன். உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் அமெரிக்காவின் இந்த அதிரடி வரி உயர்வு இந்தியப் பொருளாதாரத்தையும், ஏற்றுமதியையும் கடுமையாகப் பாதிக்கும் என தலைவர்கள் கவலை தெரிவித்தனர். பன் னாட்டுஅளவில் இந்திய நலன்களைப் பாதுகாக்க ஒன்றியய பாஜக அரசு தவறிவிட்டதாக ஆர்ப் பாட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இதில் திரளான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப் பைப் பதிவு செய்தனர்.
