சென்னை, ஜன.23- உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன் மற்றும் விவசாயம் , சிறு – குறு – தொழில் முனைவோர்களுக்கு வழங்கும் நிதிச் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் பினோத்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 31.12.2025 அன்று முடிவடைந்த காலாண்டு – ஒன்பது மாதங்கள் கால அளவிற்கான நிதிசார் முடிவுகளை நேற்று (22.1.2026) வெளியிட்டு அவர் தெரிவித்திருப்பதாவது:-
தமிழர் திருநாள் பொங்கல் விழா முன்னிட்டு வடமணப்பாக்கம் தந்தை பெரியார் சிலைக்கு செய்யாறு மாவட்டக் கழகச் செயலாளர் பொன்.சுந்தர் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் வடமணப்பாக்கம் கழக தலைவர் மு.வெங்கடேசன் மற்றும் தோழர்கள்.
உயர்கல்வி பயிலும் மாணவர் களுக்கு வழக்கம்போல் அளிக்கப் பட்டுவரும் கல்விக் கடன்கள் கூடு தலாகவே அளிக்கப்பட்டு வருகிறது. வேளாண்மை மேம்பாட்டிற்காக விவசாயத்திற்கு அளிக்கப்படும் கடன்கள் கிராமப்புற மக்களுக்காக அதிகளவில் அளிக்கப்பட்டு வருகின்றது.
தொழில் முனைவர் மேம் பாட்டிற்காக சிறு – குறு -நடுத்தர தொழில்களுக்கு கடந்த ஆண்டை விட கூடுதலாகக் கடன்கள் இந்தியன் வங்கி வழங்கி வருகிறது.
ரீடெய்ல், விவசாயம், சிறு – குறு – தொழில்களுக்கு (MSME) ஆகிய பிரிவுகளுக்கான கடன்கள் முந்தைய ஆண்டைவிட முறையே 18.54 சதவீதம், 15.14 சதவீதம் மற்றும் 16.41 சதவீதம் என அதிகரித்திருக்கின்றன. முந்தைய ஆண்டைவிட வீட்டுக் கடன் டிசம்பர் 25இல் 14.20 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
டிசம்பர் 24இல் பதிவான ரூ.2852 கோடி என்பதிலிருந்து டிசம்பர் 25இல் ரூ.3061 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 7.33 சதவீதம் வளர்ச்சியை இவ்வங்கி கண்டிருக்கிறது. மாறி வரும் தேவைகளுக்கேற்ப பொருத்தமான சேவையை வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் வங்கி விரைவாக வழங்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
