நட்டக் கல்லும் பேசுமோ?
* சிறுத்தைகள் நடமாட்டத்தால், மாதேஸ்வரன் மலைக்குப் பக்தர்கள் செல்லத் தடை!
* மாதேஸ்வரன் என்ன செய்கிறாராம்; நட்டக் கல்லும் பேசுமோ?
கடவுள்களும் பார்ப்பன ஜாதியைச் சேர்ந்தவர்களா?
* ஸநாதன தர்மம் குறித்த பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலினை பதவி நீக்கம் செய்ய வேண்டுமாம்?
– சொல்லுகிறது பிஜேபி!
* வெங்கடாஜலபதிக்கும், திருப்பரங்குன்றம் முரு கனுக்கும், சிறீரங்கம் ரங்கநாதனுக்கும் பூணூல் அணி வித்திருக்கிறார்களே, இதற்கு என்ன பொருள்? என்ன செய்ய உத்தேசம்? கடவுள்களும் பார்ப்பன ஜாதியைச் சேர்ந்தவர்களா?
ஆபத்து வராமல் இருந்தால் சரி!
* அய்யப்பன் கோயிலில் ‘பிரதிஷ்டை’ செய்யப்பட்டுள்ள ‘புனித’ கற்கள் பக்தர்களை ஈர்த்துள்ளனவாம்!
* சபரிமலையில் தங்கம் திருட்டு போனது போல், இந்தக் கற்களுக்கும் ஆபத்து வராமல் இருந்தால் சரி!
