சோழிங்கநல்லூர், ஜன. 22- சோழிங்கநல்லூர் மாவட் டத்தின் கலந்துரையாடல் கூட்டம் 18.1.2026 அன்று காலை 11 மணியளவில் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில், மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை இரா.தே. வீரபத்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
இரா. தே. வீரபத்திரன் கடவுள் மறுப்புக் கூறி புதிதாக நிர்வாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட தோழர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
செங்கை மறைமலை நகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுநிறைவு விழா மாநாட்டிற்கு நன்கொடைகள் திரட்டித்தந்து மாவட்டம் இரண்டாம் இடம் பிடிக்க உறுதுணையாக இருந்த மாவட்ட காப்பாளர் நீலாங்கரை இரா.தே.வீரபத்திரன், மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு மற்றும் பகுத்தறிவாளக் கழக ஆனந்தன் ஆகியோருக்கு மாவட்டச் செயலாளர் தமிழினியன் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.
பின்னர் மும்பை மாநாட்டு சிறப்புகளைத் தலைவர் வேலூர் பாண்டு விளக்கி மும்பை மாநாட்டில் கலந்து கொண்ட தோழர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
மறைந்த சென்னை மண்டலத்தலைவர் தி.இரா.இரத்தினசாமி மற்றும் ஆதிலட்சுமி அம்மையார் அவர்களின் சிறப்பினை எடுத்துக்கூறி வரும் 8.02.2026 அன்று பெரியார் திடலில் நடைபெறும் இருவரின் படத் திறப்புவிழாவிற்கு அனைவரும் செல்லவேண்டும் என்றார்.
துணைத் தலைவர் இரா.கலைச்செல்வன் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.
தீர்மானங்கள்.
புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்த் துகளைத் தெரிவிக்கிறது
பெரியார் உலக நிதிக்கு கணிசமாக நிதி வழங்குவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.
தி.இரா.இரத்தினசாமி – ஆதிலட்சுமி அம்மையார் படத் திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்வது எனத் தீர் மானிக்கப்படுகிறது.
