நெல்லை அருகே 450 ஆண்டு பழமையான கல்வெட்டு, பீரங்கிக் குண்டுகள் கண்டெடுப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நெல்லை, ஜன.22 நெல்லை மானூர் அருகே செழியநல்லூரில், 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டும் ஆங்கிலேயர் காலத்தை சேர்ந்த பீரங்கிக் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 450 ஆண்டுக்கு முன்புள்ள வரலாற்றை ஆய்வு செய்ய வாய்ப்பு கிட்டியுள்ளதாக தொல்லியல் துறை மாணவர்கள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகள் இன்றளவும் மன்னர்கள் காலப் பல்வேறு கல்வெட்டுகளை உடையதாக உள்ளது.

சங்கு – சக்கர உருவம்

இதற்கான வரலாற்றுச் சான்றுகள் மானூர் அருகேயுள்ள அழகியபாண்டியபுரம், செழிய நல்லூர் பகுதிகளில் கிடைத்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் 2ஆம் ஆண்டு பயின்று வரும் மாணவர் பிரித்திவ்ராஜ், மானூர் பகுதியில் மேற்கொண்ட களஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய கட்டடத்திற்கு அருகே ஒரு கல்வெட்டை கண்டுபிடித்தார். அந்த கல்வெட்டு உள்ள தூணின் ஒரு புறத்தில் சங்கு மற்றும் சக்கர உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதற்கு கீழ்ப்பகுதியில் இருந்து தற்காலத் தமிழில் கல்வெட்டு வாசகங்கள் தொடங்குகின்றன. தொல்லியல் துறை உதவி பேராசிரியர்கள் மதிவாணன், முருகன் மற்றும் தொல்லியலாளர் மீனா ஆகியோர் கல்வெட்டை வாசித்து ஆய்வு செய்தனர். இந்த கல்வெட்டு கொல்லம் ஆண்டு 748, தை மாதம் 28ஆம் நாள் நிறுவப்பட்டுள்ளது. இது சுமார் 453 ஆண்டுகள் பழமையானது எனவும் தெரிகிறது. இது திருவிடையாட்டம் என்ற நில கொடையாக வழங்கப்பட்டதை விளக்குகிறது.  இதற்கிடையே, செழியநல்லூர் பகுதியில் உதவிப் பேராசிரியர் மதிவாணன் பழங்காலக் கருங்கல்லாலான பீரங்கி குண்டு ஒன்றைக் கண்டெடுத்தார். இதுகுறித்து ஊர் மக்களிடம் விசாரித்தபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஒரு பெரிய வாகை மரம் விழுந்ததாகவும் அப்போது அதன் வேர்ப்பகுதியில் இருந்து இதுபோல நூற்றுக்கணக்கான குண்டுகள் வெளிப்பட்டதாகவும் தெரிவித்தனர். அவற்றைச் சிறுவர்கள் எடுத்து விளையாடி வந்த நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாத்து வைத்திருந்த சில குண்டுகளை எடுத்து வந்து ஒப்படைத்தனர்.

இந்த குண்டுகள் பெரும்பாலும் 2 அங்குல விட்டத்துடனும் ஒன்று மட்டும் 3 அங்குல விட்டத்துட னும் இருந்தன. இவை ஆங்கிலேயர் காலத்தை சார்ந்ததாக இருக்கலாம் என தொல்லியல் துறை பேராசிரியர் சுதாகர் தெரிவித்தார்.  வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தடயங்களை வெளிக்கொண்டு வந்த களஆய்வுக் குழுவினரை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *