வீணானது
இலவசப் பொருள்கள் வழங்கும் திட்டத்தின் விதிகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தால் மடிக் கணினி வழங்காமல் விட்டதில் ரூ.68.51 கோடி; காலணிகள் வாங்கியதில் ரூ.5.47 கோடி, பள்ளிப் பைகள் வாங்கியதில் ரூ.7.28 கோடி கடந்த ஆட்சியில் வீணாக்கப்பட்டுள்ளதாக தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.
நிறைவேற்றம்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று (21.4.2023) ஒரே நாளில் 17 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டமுன் வடிவு, 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி ஒதுக்க சட்ட முடிவு, சென்னை மாநகர காவல் திருத்த சட்ட முன் வடிவு உள்ளிட்ட 17 சட்ட மசோதாக்கள் சட்டப் பேரவையில் அந்தந்த துறை அமைச்சர்களால் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
ஒத்தி வைப்பு
தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் கடந்த மார்ச் 20ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கலுடன் தொடங்கி நேற்று (21.4.2023) இறுதி நாளாக காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார். அதை யடுத்து சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சட்டப் பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப் படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறிவித்தார்.
விசாரணை
அம்பை அருகே விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விசா ரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிபிசிஅய்டி ஆய்வாளர் உலக ராணியிடம் வழக்கு தொடர் பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து அவர் உடனே விசாரணையைத் தொடங்கினார்.
கல்லூரிகள்
2023-2024ஆம் கல்வியாண்டில் கோடை விடுமுறைக்குப் பின் வருகிற ஜூன் 19ஆம் தேதி மீண்டும் கல்லூரி திறக்கப்படும். 2022-2023ஆம் கல்வியாண்டில் பல்கலைக் கழகம் நிர்ணயம் செய்த மொத்த வேலை நாள்களுக்கு குறையாமல் உள்ளது என்பதை அந்தந்த கல்லூரி முதல் வர்களே உறுதி செய்து கொண்டு கல்லூரி இறுதிப் பணி நாளை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
நீக்கம்
டிவிட்டர் வெரிபைட் பயனாளர்கள் பிரிவில் ‘புளூ டிக்’ குறியீடு கொண்டவர்கள் 3 லட்சம் பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆவர். அதில் போப் பிரான்சிஸ், மேனாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், ராகுல் காந்தி, மம்தா உள்ளிட்ட பிரபலங்களின் ‘புளூ டிக்’ குறியீட்டை டிவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.
ஒப்பந்தம்
இந்தியன் வங்கியின் எண்ம பணப் பரிவர்த் தனைத் தளத்தை தமிழ்நாடு அரசின் இணைய வழி சேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற் கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினருக்கும் இடையே அண்மையில் கையொப்பமாகியுள்ளது.