இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924)
சோவியத் யூனியனின் தந்தை என்று அழைக்கப்படும் புரட்சியாளர் விளாடிமிர் லெனின் அவருடைய 102-ஆவது நினைவு நாள் இன்று (21.1.1924)
புரட்சியின் நாயகன்: 1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற புகழ்பெற்ற அக்டோபர் புரட்சியை முன்னின்று நடத்தியவர். ஜார் மன்னர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, உலகில் முதன்முதலாக ஒரு ‘தொழிலாளர் அரசை’ உருவாக்கினார்.
சோவியத் ஒன்றியம்: நவீன ரஷ்யாவின் சிற்பியாகக் கருதப்படும் இவர், சோவியத் யூனியன் உருவாவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். அதன் முதல் தலைவ ராகவும் பணியாற்றினார்.
மார்க்சியச் சிந்தனையாளர்: கார்ல் மார்க்ஸின் கொள்கைகளை ரஷ்யாவின் சூழலுக்கு ஏற்ப மாற் றியமைத்தார். இது பிற்காலத்தில் ‘லெனினிசம்’ என்று அழைக்கப்பட்டது. “அதிகாரம் அனைத்தும் சோவியத் துகளுக்கே” என்பது இவரது புகழ்பெற்ற முழக்கமாகும்.
எளியவர்களுக்கான தலைவர்: நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து, நிலங்களை விவசாயிகளுக்கும், தொழிற் சாலைகளைத் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப் பாடுபட்டார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங் களில் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
புரட்சியாளர் லெனின் இளைஞர்களுக்கு லெனின் வழங்கிய மிக முக்கியமான அறிவுரை படி மேலும் படி, ‘‘எப்போதும் படிப்பை கைவிடாதே’’ ( ஹுஸிசா, ஹுஸிசா, ஈ யோஷோ ராஸ் ஹுஸிசா) என்ற முழக்கம் கம்யுனிஸ்ட்களை விரும்பாத முதலாளித்ததுவ நாடுகளில் உள்ள இளைஞர்களையும் ஈர்த்தது. அவருடைய உடல் இன்றும் மாஸ்கோவில் உள்ள லெனின் நினைவகத்தில் பொதுமக்கள் பார்வைக்காகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
