சென்னை, ஜன.21- விருதுநகரில், துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில், தி.மு.க. இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு, பிப். 7ஆம் தேதி நடக்கவுள்ளது.
கடந்த டிச. 14இல் திருவண்ணா மலையில் நடந்த வட மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில், 91 சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகள் உட்பட, ஒரு லட்சத்து, 30,000 பேர் பங்கேற்றனர்.
இதையடுத்து, பிப். 7ஆம் தேதி விருதுநகரில் நடக்கவுள்ள தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
