கள்ளக்குறிச்சி அருகே ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மணலூர் பேட்டையில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் தள்ளுவண்டியில் ஒருவர் கேஸ் பலூன் விற்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்துள்ளது. இதில், காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிகக்கூடும் என அஞ்சப்படுகிறது.
