வடுகக்குடி, ஜன. 18– திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் வடுகக்குடி ஊராட்சியில் தை திங்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனவரி 15 அன்று தந்தை பெரியார் விளையாட்டு கழகம் சார்பில் 44 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் வெகு சிறப் பாக நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட கழக காப்பாளர் வீர.கோவிந்தராசு தலை மையில் அனைத்து கட்சியின் சார்பில் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டி.ஆர்.டி.ஏ. ராஜேந்திரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி அறிவழகன் அண்ணா தொழிற்சங்க பொறுப்பாளர் குமரேசன், திமுக கிளைச் செயலாளர் மணிக்கண்ணன் உள்ளிட் டோர் முன்னிலையில் முருகையன், பழனிச்சாமி, குமார், கஞ்சமலை பன்னீர்செல்வம், பக்கிரி சாமி ஒருங்கிணைப்பில் திருவாரூர் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
