புதுச்சேரி, ஜன. 18– திருவள்ளுவர் ஆண்டு 2056 [10-1-2026] சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் 37ஆவது திருவள்ளுவர் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்த் தாய் வாழ்த்தினை மு.மயூர ராஜன் பாடினார். திருவள்ளுவர் தொண்டர் தி.சண்முகம் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் விழாவிற்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து தலைமை தாங்கினார். செயலாளர் பாவலர் சீனு. மோகன்தாஸ், துணைத் தலைவர் பாவலர் பா.திருநாவுக்கரசு, கலைமாமணி சீனு. வேணு கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி மாவட்டக் கழகத் தலைவர் வே.அன்பரசன், புதுச்சேரி மாநிலத் கழகத் தலைவர் சிவ.வீரமணி, புன்னகை பூக்கள் நாடக மன்ற நிறுவனர் புதுவை பார்த்தசாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக கழகப் பொதுச்செயலாளர் முனைவர். துரை. சந்திரசேகரன் ஆதிக்க சக்திகள், ஸநாதனவாதிகள் மகாபாரதம், இராமாயணம் குறித்து பரப்புரை மேற்கொண்ட பொழுது தத்துவத் தலைவர் தந்தை பெரியார் தான் திருவள்ளுவர் எழுதியத் திருக் குறளை பரப்ப திருக்குறள் புத்தகங்களை மலிவு விலையில் அச்சிட்டு 50 பைசாவுக்கு விற்பனை செய்து பரப்பினார்.
தமிழ்நாட்டில் திருவள்ளுவர் மாநாடு திருக்குறள் மாநாடுகளை பெரும் அறிஞர் பெருமக்களை கொண்டு நடத்தினார். புதுச் சேரியில் புரட்சி கவிஞரும் திருக்குறள் பரப்பரை மேற் கொண்டார். பெரியார் அவர்கள் கொள்கையை ஏற்ற திருக்குறள் முனிசாமி திருக்குறளையும் திருவள்ளுவரின் பெருமைகளையும் நகைச்சுவையாக மக்கள் மத்தியில் எடுத்துப் பேசி திருக்குறளுக்கு பெருமை சேர்த்தார். திருக்குறள் பெருமை பெற்றது, திருக்குறளால் இவரும் பெருமை பெற்றார். அதனால் “திருக்குறள் முனிசாமி” என அழைக்கப்பட்டார்.
அதேபோன்று புதுச்சேரி யில் நமது தோழர் பெருமாள் என்பவர் திருக்குறள் நூல்களையும் திருவள்ளுவர் சிறப்புகளையும் எடுத்து குறி பரப்புரை மேற்கொள்வார் அதனால் “திருக்குறள் பெரு மாள்” என்று அழைக்கப்பட்டார். அதேபோல இந்த எளிய மனிதர் இவ்வளவு சிறப்பாக 37 ஆண்டுகளாக திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை பரப்ப மிக பெரும் பணியை மேற்கொண்டு வருவதை பாராட்டி “திரு வள்ளுவர் தொண்டர்” தி.சண்முகம் அவர்களை “திருக்குறள் சண்முகம்” என்று அழைக்கப்படுவார் எனவும், அவரது பணி மேலும் சிறக்க திராவிடர் கழகத்தின் சார்பில் நெஞ்சார வாழ்த்தி சிறப்புரை உரையாற்றினார். நிகழ்ச்சியில் முனைவர் புவனேஸ்வரி ரகுராமன் தொகுத்து வழங்கினார். நிறைவாக திருக்குறள் சண்முகம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திருக்குறளை ஒப்பவித்தவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு, திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கு முனைவர் வி. முத்து, சீனு. மோகன்தாசு, தலைவர் சிவ.வீரமணி, வே.அன் பரசன் ஆகியோருடன் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் அவர்களும் பரிசு பொருள்களை வழங்கி மகிழ்கின்றனர். நிகழ்வில் புதுச்சேரி விடுதலைவாசகர் வட்டத் தலைவர்கோ.மு. தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ.சிவராசன் மற்றும் கழக தோழர்கள் பொதுமக்கள் அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
