நமது நாட்டான் அறிவு இருப்பது பிள்ளை பெறவும், வாழ்வு பூராவும் அதோடு தொல்லையனுபவிக்கவும், அதனைக் காப்பதில் தன் வாழ்வை, உழைப்பைப் பயன்படுத்துவதற்கும் என்று கருதுவதால் வாழ்வு பூராவும் தொல்லைகளையே அனுபவிக்கின்றான். அறிவு இருப்பது மனிதன் தொல்லையற்றுச் சுகவாழ்வு வாழவும், விஞ்ஞான அதிசய அற்புதங்களைக் காணவுமே! நம் மக்கள்கடவுளுக்கும், அறிவிற்கும் சம்பந்தமில்லை என்று மேல் நாட்டானைப் போன்று அறிவை அறிவோடு பயன்படுவதில்லையே – ஏன்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
