தூத்துக்குடி, ஜன. 12- தூத்துக்குடி உண்மை வாசகர்் வட்டம் 47ஆவது நிகழ்வு நூல் அறிமுகக் கூட்டமாக 10.01.2026 மாலை 5.30 மணியளவில் பெரியார் மய்யம் அன்னை நாகம்மையார் அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சொ.பொன்ராஜ் தலைமையேற்று உரையாற் றினார். உண்மை வாசகர் வட்டச் செயலாளர் மா.பால்ராசேந்திரம் எழு தியுள்ள ‘அறிவை மயக்கும் அட்சய த்ரிதியை’ என்ற நூலினை சீ.மனோகரன் அறிமுகம் செய்து,15 தலைப்புகளில் உள்ள செய்திகளைக் கோடிட்டுக் காட்டி உரையாற்றினார்.
அடுத்து, ‘பொங்கல் பெருவிழா தமிழர் விழா’ என்ற பொருளில் தி.மு.க.இலக்கிய அணி மாவட்டப் பொறுப்பாளர் மோ.அன்பழகன், உலகத் திருக்குறள் பேரவைப் பொறுப்பாளர் கவிஞர். கோ.இளமுருகு ஆகியோர் கருத்துகளை வழங்கி, தமிழர்களின் பண்பாட் டோடு இணைந்த, அறிவியலோடு கூடிய பொங்கல் விழா தமிழர் தம் வாழ்வியலோடு பொருத்தப்பாடுடைய விழா.அதனைத் தமிழர் கள் எழுச்சியோடு கொண் டாடச் செய்திடுவோம் என்றார்கள்.
நிறைவுரையாக, அறிமுகமான புத்தகத்தின் கட்டுரைகளின் கருத்துக்களை விளக்கி, பொங்கல் விழா, தமிழர் புத்தாண்டு விழாவென்ற வரலாற்றுச் செய்திகளை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார் வாசகர் வட்டச் செயலாளர் ம.பால் ராசேந்திரம். இறுதியாக மாநகர திராவிடர் கழகத் தலைவர் த.பெரியார்தாசன் நன்றி கூறிட கூட்டம் இரவு 8 மணிக்கு நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் மு.முனியசாமி, கி.கோபால்சாமி, அ.பிரசாத் ஆகியோர் கலந்து கொண் டார்கள்.
