தந்தை பெரியாரின் மறைவுக் குப் பின் பிறந்திட்ட –
என்னைப் போன்றோரை
கருப்புச் சட்டை அணிந்து
இன்றுவரை களம் காண வைத்தது –
அந்த 70 ஆண்டு சாதனை கருப்புச் சட்டை
‘வெறுக்கத் தக்கதா பிராமணி யம்’ என அவாள் ஏட்டில் தொடர் வர, ‘வெறுக்கத்தக்கதே பிராமணி யம்’ என்று உண்மையில் மறுப் பெழுதி எதிர்முனை எழுது கோலை உடைத்துப் போட்டது –
அந்த 70 ஆண்டு கால சாதனை கருப்புச் சட்டை
இந்தியாவில் ஆண்ட அரசுகள் அடங்கி ஒடுங்கி கூனிக் குறுகி ஆசிகள் பெற்ற அந்த மடத்தையே ‘சங்கராச்சாரி யார்?’ என கிழி கிழி யெனக் கிழித்து தோரணமாய் தொங்க விட்டதும்
அந்த 70 ஆண்டு கால சாதனை கருப்பு சட்டை
தமிழ் நாட்டு தமிழர் முதல் உலகத் தமிழருக்கு ஓர் இன்னல் என்றால் கர்ஜிக்கும் முதல் குரல் அந்த 70 ஆண்டு சாதனை கருப்புச் சட்டை
திருவாளர் அந்து மணி… ஏ இன்றைக்கும் உங்கள் அடிவயிற்றில் நெருப்பை பற்ற வைத் ததைப் போல் பூமிக்கும் வானத் திற்கும் குதிக்கிறீர்கள் என்றால் –
தந்தை பெரியார் தந்த தத்துவ வாரிசு –
அந்த 70 ஆண்டுகால சாதனை கருப்புச் சட்டை
அதற்கு சொந்தக்காரர் எங்கள் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் என ஒப்புதல் தந்தமைக்கு நன்றி!