‘இங்கே நல்ல மீன் விலைக்குக் கிடைக்கும்!’- இப்படி எழுதப் பட்டிருந்ததைப் பார்த்த நான்கு மனிதர்களின் 4 அபிப்பிராயங்கள் இவை:
ஒருவர்: “இங்கே மீன் கொடுக்காமல் வேறு கடையிலா கொடுப்பாய்? ஆகவே ‘இங்கே’ என்ற சொல் வேண்டாம்!”
இன்னொருவர்: “நல்ல மீன் கொடுக்காமல் கெட்ட மீன் கொடுத்தால் யார் வாங்குவார்கள்? எனவே! நல்ல என்பது வேண்டாம்.”
மற்றொருவர்: “விலைக்குக் கிடைக்காமல் சும்மாவா கிடைக்கும்? ஆகவே. விலைக்குக் கிடைக்கும்’ என்பது வேண்டாம்.”
வேறொருவர்: “மீன் கடையில் மீன் என்று ஏன் எழுத வேண்டும்?”
நாலு பேர் வார்த்தையும் கேட்டான் கடைக்காரன். கடைசியில் விளம்பரப் பலகையில் எழுத்தே இல்லை!
(இன்றும் சிரிக்க வைக்கும் இந்த நகைச்சுவை அறிஞர் அண்ணாவின் ‘காஞ்சி’ ஏட்டில் வந்ததாகும்.)
