சூடானில் தீவிரமடையும் உள்நாட்டுப் போர் 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேர் மீட்பு

1 Min Read

அரசியல்

கார்தோம் ஏப். 25- வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ராணுவத் தளபதி அப்தல் பதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையான ஆர்எஸ்எப் பிரிவும் (ரேபிட் சப்போர்ட் போர்ஸ்) கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. இரு குழுவிலும் அரசு சார்ந்த ஆயுதங்கள் இருப்பதால் ஏவுகணை வீச்சுக் கூட  அரங்கேறி வருகிறது. 

இந்த மோதலில் இதுவரை பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக வும்,  3,351 பேர்  காயமடைந்துள்ளதாகவும், இறந்த வர்களில் 9 பேர் குழந்தைகளும் அடங்கு வர் எனவும் உலக சுகாதார அமைப்பு (கீபிளி) அறிவித்துள்ளது. கணிக்க முடியாத தாக்குதலால் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சிகிச்சை பெற முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

மேலும் உணவு, தண்ணீர், மருந்துகள், மின்சாரம் என அடிப்படை வசதிகள் இல்லாமல் 70 லட்சம் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துள்ளது. இதில் 4,000 இந்தியர்களும் சூடானில் சிக்கி யுள்ளனர். இந்தியர்களை  மீட்க இந்திய வெளியுறவுத்துறை சூடான் தூதரக அதிகாரிகளுடன் பேசி தீவிர முயற்சி மேற் கொண்டு வரும் நிலையில், சூடானில் உள்ள பிரான்சு நாட்டின் தூத ரக முயற்சியால்இந்தியர்கள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தூதர கம் தகவல் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *