9.1.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; மக்கள் மகிழ்ச்சி
* ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 500 சதவீதம் கூடுதல் வரி: டிரம்ப் கையெழுத்து.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மேற்குவங்கத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பரபரப்பு அய் பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு: திரிணாமுல் வேட்பாளர் பட்டியல், தேர்தல் வியூகங்கள் பறிமுதல்? உள்ளே புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற முதலமைச்சர் மம்தா.
* வாக்காளர் சிறப்பு திருத்தம் ஒரு சதி; மோடி அரசு மாற்றியுள்ள ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழித்துக் கட்ட வேண்டும், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் சபதம்.
* மோடி அரசின் விபி.ஜி.ராம்.ஜி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கருநாடகா அரசு முடிவு.
* பாஜக -அதிமுக மெகா கூட்டணி தமிழ்நாட்டில் எடுபடாது, தலையங்கம்.
தி இந்து:
* திராவிட மாடல் தொழில்நுட்பத்தை சமூக மேம்பாட்டிற்கான ஒரு கருவியாகக் கருதுகிறது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு மட்டுமான கருவி இல்லை; அது சாமானியர்களை EMPOWER செய்யும் கருவி. இந்த மாற்றம் ஒரு நகரத்தில் மட்டுமே சுருங்கி விடாமல், மாநிலம் முழுவதும் சமமாக பரவுவதையும் உறுதி செய்திருக்கிறோம் என பெருமிதம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான தீர்ப்பு அரசியலமைப்புச் சட்ட கோட்பாடுகளுக்கு முரணானது என்றும், மாநிலத்தின் நீண்டகால மத நல்லிணக்க மரபைக் குலைக்கும் அபாயம் கொண்டது என்கிறார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* 7 ஆர்எஸ்எஸ் நபர்களுக்கு ஆயுள் தண்டனை: கண்ணூர்: கேரளாவின் தலச்சேரி அமர்வு நீதிமன்றம், 2008இல் சிபிஎம் நிர்வாகி கே. லதீஷ் கொலை வழக்கில் ஏழு பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு வியாழக்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.
– குடந்தை கருணா
