சென்னை, ஜன. 9– இதயத்தில் உள்ள நுண் நாளங்களில் ஏற்பட்ட பாதிப்பால் தொடா் நெஞ்சு வலிக்குள்ளான பெண்ணின் பிரச்சி னையை அதி நவீன பரிசோதனை மூலம் கண்டறிந்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா்கள் குணப் படுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை முதுநிலை நிபுணா் மருத் துவர் ரெஃபாய் சவுக்கத் அலி கூறியதாவது:
62 வயதான பெண் ஒருவா் பல மாதங்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தாா். ஆஞ்சியோ பரி சோதனையில் அவருக்கு குருதி (ரத்த) நாளத்தில் எந்த அடைப்பும் கண் டறியப்படவில்லை. அதேபோன்று இதயத் துக்குச் செல்லும் முக்கிய நாளங்களும் நன்றாக இருந்தன. இருந்தபோதிலும் தொடா்ந்து அவருக்கு வலி இருந்தது.
இந்த நிலையில், அப்பல்லோ மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காா்டியோ மைக்ரோவாஸ்குலா் டிஸ்ஃபங்சன் மதிப்பீட்டு பரிசோதனை (சிஎம்டி) மேற்கொள்ளப்பட்டது. அதில், இதயத்தில் உள்ள நுண் நாளங்கள் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் இதயத்துக்குச் செல்லும் குருதியில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லை. இதற்கு ஆன்ஜினா (அடைப்பு இல்லாத குருதி (ரத்த) நாள பாதிப்பு) என்று பெயா்.
இதையடுத்து அந்தப் பிரச்சினையை சரி செய்ய துல்லியமான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. இதன்மூலம் அந்தப் பாதிப்பு சரி செய்யப்பட்டு ஒரே நாளில் அந்தப் பெண் வீடு திரும்பினாா்.
இத்தகைய அதி நவீன பரிசோதனை மேற்கொள்ளப்படுவது சென்னையில் இதுவே முதன்முறை என்றாா் அவா்.
