தஞ்சையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு கம்யூ. கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

1 Min Read

தஞ்சாவூர், ஏப். 25-  இந்திய அர சமைப்புச் சட்டத்திற்கு எதி ராகவும் ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புக ளின் முகவராகவும், தமிழ் நாட்டு மக்களின் நல னுக்கு எதிராகவும்  செயல் பட்டுக் கொண்டு, மார்க் சியத்தை அவதூறாக வும் பேசி வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சைக்கு வருவதை (24.4.2023) கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  

ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து.உத்தி ராபதி, வடக்கு மாவட் டச் செயலாளர் மு.அ. பாரதி ஆகியோர் தலைமை வகித்தனர்.  

இதில் சிபிஎம் மாவட் டச் செயற்குழு உறுப்பி னர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோ கரன், கே.பக் கிரிசாமி, சி. ஜெயபால், பி.செந்தில் குமார், என். வி.கண்ணன், எஸ்.தமிழ் செல்வி, என். சுரேஷ் குமார், கே.அருளர சன், எம்.செல்வம், என்.சிவ குரு, ஆர்.கலைச்செல்வி, ஒன்றியச் செயலாளர் கே. அபிமன்னன், மாநகர செயலாளர் எம்.வடி வேலன், சிஅய் டியு கே. அன்பு, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஏஅய் டியுசி ஆர்.தில்லை வனம், வீர மோகன், ஆர். செந்தில் குமார், கோ.சக்தி வேல், கு. சேவையா, மாவட்ட நிர்வாகிகள் துரை.பன்னீர்செல்வம், ஆர்.கே.செல்வகுமார், ராஜேந்திரன், மாநகரச் செயலாளர் பிரபாகர், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் விஜயலட் சுமி, கண்ணகி, தாமரைச் செல்வி, சிபிஅய் ஒன்  றியச் செயலாளர் ஜார்ஜ்  துரை, உள்ளிட்ட நூற் றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் கலந்து   கொண்டவர்களை காவல் துறையினர் உட னடியாக கைது செய்து தனியார் திரு மண மண் டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *