சென்னை, ஏப். 25- தமிழ்நாட் டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்க ளுக்கு கருணை அடிப்படையில் 5 மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 10 ஆம் தேதி நடை பெற்ற ஆங்கில பாடத்திற் கான விடைகள் வெளியா னது. இதில்,4,5,6 ஆகிய 1 மதிப்பெண் வினாக்கள் மற்றும் 2 மதிப்பெண் கொண்ட 28 ஆவது வினாக் களுக்கு குழப்பங்கள் நில வியது. இதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரி யர்கள் மற்றும் மாணவர் கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந் நிலையில், இதனை பரிசீ லனை செய்த தேர்வுத் துறை இயக்கு நர் கருணை மதிப்பெண் வழங்க உத்த ரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து ஆங்கில தேர்வில் தவறாக கேட்கப் பட்ட 4,5,6 ஆகிய 1 மதிப் பெண் வினாக்களுக்கும், 2 மதிப்பெண் கொண்ட 28 ஆவது வினாக்களுக்கு மாணவர்கள் எப்படி பதிலளித்திருந்தாலும் கருணை மதிப்பெண் ணாக மொத்தம் 5 மதிப் பெண்கள் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு மே 17 அன்று வெளியாகும் என்று அரசு தேர்வுத் துறை இயக்கு நரகம் அறிவித்துள் ளது.