டெக்கான் கிரானிக்கல், சென்னை
* இந்தூரில் அறிவிக்கப்பட்ட தொற்று நோய்: மாசடைந்த குடிநீரால் 15 பேர் பலியான நிலையில் இந்தூரில் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் மக்கள்: பாஜக ஆட்சியில் அவலம்.
* அரசு கல்லூரிகளில் பயிலும் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி: ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
* எஸ்ஐஆர் பணிக்கு எதிராக வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் நானே ஆஜராகி வாதாடுவேன்: மம்தா அறிவிப்பு.
* இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து நான் மகிழ்ச்சியாக இல்லை என பிரதமர் மோடிக்கு தெரியும். நிறுத்தவில்லை என்றால், வரி விகிதம் அதிகரிக்கும் என டிரம்ப் எச்சரிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ம.பி. பாஜக அரசின் அடாவடி: இந்தூரில் நீர் மாசுபாடு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தொடர்ந்து, மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியாவின் சர்ச்சைக்குரிய “கண்டா” கருத்துக்களை “அதிகாரத்துவ நடத்தைக்கான சின்னம்” என்று குறிப்பிட்டு உத்தரவு பிறப்பித்த உஜ்ஜைனின் துணை கோட்டாட்சியர் (SDM) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தி இந்து
* இந்தியா மீது அதிக வரி விதிக்க நேரிடும் என்ற டிரம்ப் எச்சரிக்கை குறித்து “அந்த ‘நமஸ்தே டிரம்ப்’, ‘அவுடி மோடி’ நிகழ்ச்சிகள், அந்த (கட்டாய) அணைப்புகள், மற்றும் அமெரிக்க அதிபரை புகழ்ந்து வெளியிடப்பட்ட சமூக ஊடகப் பதிவுகள் அனைத்தும் மிகக் குறைந்த நன்மையையே செய்துள்ளன,” என்று காங்கிரஸ் கண்டனம்.
தி டெலிகிராப்
* கடும் எதிர்ப்புகளுக்கு பிறகு, பட்டியல் ஜாதி மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை இடங்களை இரட்டிப்பாக்க சமூக நீதி மற்றும் பழங்குடியினர் நல அமைச்சகங்கள் திட்டம்.
– குடந்தை கருணா
