வேலை வாய்ப்பு வழங்குவதிலும் தமிழ்நாடே முன்னிலை! 2025-இல் மட்டும் 20,471 தேர்வர்கள் அரசுப் பணிக்கு தேர்வு : டிஎன்பிஎஸ்சி தகவல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.2 2025-ஆம் ஆண்டில் அரசுப் பணிகளுக்கு 20,471 தேர்வர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுப்பணிகள் துரிதப்படுத் தப்பட்டு 2025-ஆம் ஆண்டு 20,471 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 9,770 தேர்வர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2025-ஆம் ஆண்டு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க 11,809 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப் பட்டுள்ளன.

அறிவிக்கை வெளியிடப்படும் நாள், தேர்வு நடைபெறும் நாள் ஆகிய விவரங்களுடன் கூடிய ஆண்டுத் திட்டம் வெளியிடப்பட்டு, அனைத்து அறிவிக்கைகளும் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட நாட்களில் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அரசுப் பணிகளின் நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 2025-ஆம் ஆண்டு 1,007 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப்பணியிடங்கள் ,நிரப்பப்பட்டுள்ளன. மேலும் பட்டியலின மற்றும் பழங் குடியினருக்கான 761 குறைவு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு தெரிவுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக 2025-ஆம் ஆண்டு கலந்தாய்வின் போது காலிப்பணியிடங்களின் விவரங்களை தேர்வர்கள் இணையவழியில் அறிந்துகொள்ளும் வகையில் தேர்வாணையத்தின் வலையொளி (youtube) சேனல் மூலமாக நேரலையாக ஒளி பரப்பும் நடைமுறையும், கணினிவழி மூலம் நடைபெறும் தேர்வுகளில் தேர்வர்கள் தங்களது விடைத்தாளை உத்தேச விடைகள் வெளியிடும்போது தேர்வாணைய இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வு நடைமுறைகளில் தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்தும் விதமாக 2025-ஆம் ஆண்டு அரசுத் துறைகளிடமிருந்து காலிப்பணியிட விவரங்களை இணையவழியில் பெறும் நடைமுறையும், தேர்வர்கள் தேர் வுக்கட்டணங்களை யுபிஅய் மூலம் செலுத்தும் வசதியும், தேர்வர்கள் தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் இணையவழியில் மனுக்களை சமர்ப்பிக்கும் வசதியும் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது.’’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *