சென்னை, ஜன. 2- தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முழுநேர முனைவர் பட்டப் படிப்பு (பிஎச்.டி) படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்கள் 2 ஆயிரம் பேருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, நடப்பு (2025-2026) கல்வி ஆண்டில் இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கும், ஏற்கெனவே ஊக்கத்தொகை பெறும் மாணவர்கள் அதை புதுப்பிக்கவும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முழுநேர பிஎச்.டி பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களாக இருக்க வேண்டும்.முதுகலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு வயது வரம்பு 50, மாணவிகளுக்கு 55 ஆக நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை adwphdscholarship.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பத்தை துறைத் தலைவர் மற்றும் பல்கலை. பதிவாளரின் பரிந்துரையுடன், ‘ஆணையர்,ஆதிதிராவிடர் நல ஆணையரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை – 5’ என்ற முகவரிக்கு ஜன.31-க்குள் அனுப்ப வேண்டும்.
