டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணி ரூபாய் எண்பது கோடி ஒதுக்கீடு

2 Min Read

அரசியல்

தஞ்சாவூர், ஏப்.27   காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு சிறப்பு தூர்வா ரும் பணிக்காக தமிழ்நாடு அரசு ரூ.80 கோடி நிதி ஒதுக் கீடு செய்துள்ளது. இந்தப் பணிகளை கண்காணிக்க அய்ஏஎஸ் அதிகாரிகளை மாவட்டந்தோறும் கண்கா ணிப்பு அதிகாரிகளாக தமிழ் நாடு அரசு நியமித்துள்ளது. காவிரி டெல்டா மாவட் டங்களில் மொத்தம் 37 ஆறுகள், 1,970 கி.மீ தொலைவுக்கும், 21,629 கிளை வாய்க்கால்கள் 24,524 கி.மீ தொலைவுக்கும் அமைந் துள்ளன. இதுதவிர, 924 முறை சார்ந்த ஏரிகளும், 1,428 முறை சாராத ஏரிகளும் உள் ளன. இதில் ஏரிகள் மூலம் பாசனம் பெறும் வாய்க்கால் களின் தொலைவு 2,700 கி.மீ ஆகும். டெல்டா மாவட்டங் களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக் கும் சென்று சேரும் வகையில், தூர் வாரும் பணிகளை மேற் கொள்ள சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி, நிகழாண்டு டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியு றுத்தி வந்தனர். இந்நிலையில், காவிரி பாசனப் பகுதிகளான திருச்சி மண்டலத்துக்குட் பட்ட மாவட்டங்களில் 636 தூர்வாரும் பணிகளை 4,004 கி.மீ தொலைவுக்கு மேற் கொள்ள ரூ.80 கோடியும், சென்னை மண்டலத்துக்குட் பட்ட கடலூர் மாவட்டத்தில் 55 பணிகளை 768 கி.மீ தொலைவுக்கு மேற்கொள்ள ரூ.10 கோடியும் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு அர சின் நீர்வளத்துறை சார்பில் திருச்சி மண்டலத்துக்குட் பட்ட சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடு துறை, புதுக்கோட்டை மற் றும் கடலூர் மாவட்டங்களில் சிறப்பு தூர் வாரும் பணிகள் நடைபெற உள்ளன. மேலும், இந்த தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் மாவட்டந்தோறும் கண் காணிப்பு அலுவலர்களாக அய்ஏஎஸ் அதிகாரிகள் நியமிக் கப்பட்டுள்ளனர். அதன்படி, அரியலூர் மாவட்டத்துக்கு ரமேஷ் சந்த் மீனா, கடலூர் – அன்சுல் மிஸ்ரா, கரூர்- கே.எஸ்.பழனிசாமி, மயிலாடு துறை- வே.அமுதவல்லி, நாமக்கல்- சா.விஜய ராஜ்குமார், பெரம்பலூர்- அனில் மேஷ்ராம், புதுக்கோட்டை- சு.கணேஷ், சேலம்- இல. சுப்பிரமணியன், தஞ்சாவூர்- த.ஆனந்த், திருச்சி- க.மணி வாசன், திருவாரூர்- இல.நிர் மல்ராஜ் ஆகியோர் நியமிக் கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளதால், அதற்கான பணிகள் குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்தாலோசனை நடத்தினார். 

மேலும், மற்ற மாவட் டங்களில் உள்ள அதிகாரி களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத் தினார். இதனிடையே, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் அனந்த காவிரி வாய்க்கால் தூர் வாரும் பணியை நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் இன்று (27.4.2023) தொடங்கி வைக்கிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *