வடசென்னையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் காந்தியார் (1948 இல்) சொன்னதை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘‘வேதம் ஓதுதல், வேதியருக்கு அழகு- மனுதர்ம சாஸ்திரப்படி,
புரோகிதம் செய்யவேண்டியதுதான் உங்கள் வேலை!
உங்களுக்கு, எதற்காக ‘‘டி–ஸ்கொயர்?’’ எதற்காக ‘‘அறுவைச் சிகிச்சை கருவிகள்?’’ எதற்காக ‘‘மெடிக்கல் காலேஜ்?’’ இது மனுதர்ம தத்துவத்துக்கு விரோதம் இல்லையா?’’
வடசென்னையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் காந்தியார் (1948 இல்) சொன்னதை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

சென்னை, ஜன.1  ‘‘வேதம் ஓதுதல், வேதியருக்கு அழகு– மனுதர்ம சாஸ்திரப்படி,  புரோகிதம் செய்ய வேண்டியதுதான் உங்கள் வேலை. வேதம் ஓத வேண்டிய உங்களுக்கு, எதற்காக ‘‘டி–ஸ்கொயர்?’’ எதற்காக ‘‘அறுவைச் சிகிச்சை கருவிகள்?’’ எதற்காக ‘‘மெடிக்கல் காலேஜ்?’’ இது மனுதர்ம தத்துவத்துக்கு விரோதம் இல்லையா? உங்கள் சாஸ்திரப்படி நீங்கள் செய்ய வேண்டிய வேலையை  விட்டுவிட்டு, அங்கே போவது ஏன்? இது நியாயமா?’’ என்று காந்தியார் (1948 இல்) சொன்னதை எடுத்துக்காட்டி விளக்கவுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி;
இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி; இது தான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ எனும் தலைப்பிலான பரப்புரை தொடர் பயணம் – ‘‘பெரியார் உலகம் நிதி அளிப்பு விழா!’’ ஆகிய இரு பெரும் நிகழ்ச்சிகள் – வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், 26.12.2025 அன்று மாலை 6 மணியளவில், பிரிக்களின் சாலை வெங்கடம்மாள் சமாதி தெருவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

பார்ப்பனர்கள் ஆத்திரப்பட்டார்கள்!

‘‘படி, படி, படி’’  என்று சொன்னது திராவிடம்; ‘‘படிக்காதே படிக்காதேன்னு’’ சொன்னதுதான் பி.ஜே.பி. – ஆர்.எஸ்.எஸ். இந்தப் படிப்பை ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்துட்டாங்களே என்பதுதான் நம்மீதான அவர்களுடைய கோபத்திற்குக் காரணம்.  காந்தியாரிடம் என்ன சொல்லி புகார் கொடுத்தார்கள்? ‘‘கம்யூனல் ஜி.ஓ. – வகுப்புவாரி உரிமைப்படி எல்லா உத்தியோகமும் பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்களுக்கே கொடுக்கிறார்கள்’’ என்று பார்ப்பனர்கள் ஆத்திரப்பட்டார்கள். நம்முடைய நாட்டின் சமூகநீதி வரலாறு தெரியவேண்டும். படித்தவர்களுக்கே கூட இந்தத் தகவல் தெரியாது; ஏனென்றால், பழைய வழக்குரைஞர்கள், மருத்துவர்களுக்குக் கூட தெரியாது. தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற கவலையும் அவர்களுக்கு இருப்பதில்லை.

ஏதோ வருகிறோம், தொழில் நடத்துகிறோம், சம்பாதிக்கிறோம், பேண்ட் மாட்டிக்கொண்டோம் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால், இதற்கு யார் காரணம்? தங்களுடைய வேர்களைத் தெரிந்து கொள்ளாத ஒரு சமூகம், ஒருபோதும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள முடியாது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்றைக்குச் சூத்திரன் படிக்கக் கூடாது என்று இருந்தது. ஆனால், ஓமந்தூரார் பள்ளிக்கூடம் வைத்தார். அதன் அடிப்படையில், அவர்மீது பார்ப்பனர்கள் புகார் சொன்னார்கள். காந்தியாரிடம் போய் புகார் கொடுக்கிறார்கள். ஏனென்றால், காந்தியார் தலைவர், அவர் கூப்பிட்டுக் கண்டிக்க வேண்டும் என்பதற்காக.

சென்னை மாகாணம் முழுவதற்கும் முதலமைச்சராக இருந்தவர்  ஓமந்தூரார்!

காந்தியாரும், அந்தப் புகார் கடிதத்தை வாங்கிக்கொண்டு, விசாரிக்கிறேன் என்று சொன்னார்.  அந்தப் புகார் கடிதத்தைப் படித்துப் பார்த்தார். அந்தக் கடிதத்தில் உள்ள  புள்ளி விவரங்கள் எல்லாம் பார்த்தார். உடனே ஓமந்தூராரை அழைத்து, ‘‘உங்கள் மேல் புகார் கடிதம் கொடுத்திருக்கிறார்களே பார்ப்பனர்கள்; அவர்களுக்கு உரிய வாய்ப்பைக் கொடுக்காமல் இருக்கிறீர்கள்’’ என்று கேட்டார்.

ஓமந்தூரார் ஒழுக்கச் சீலர் – காங்கிரஸ் முதலமைச்சர் – அவர்தான், இந்தியா சுதந்திரமடைந்து, 1947 இல் முதன் முதலாகக் கொண்டாடியபோது, அப்போது சென்னை மாகாணம் முழுவதற்கும் முதலமைச்சராக இருந்தவர்.

 ‘கதர்ச் சட்டைக்குள் ஒரு கருப்புச் சட்டை’

அப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரைப் பார்த்து, ‘‘நீங்கள் ஏன் பார்ப்பனர்களுக்கு விரோதமாக இருக்கிறீர்கள்? உங்களை ஏன் தாடி இல்லாத ராமசாமி நாயக்கர் என்று சொல்கிறார்கள்? ‘கதர்ச் சட்டைக்குள் ஒரு கருப்புச் சட்டை’ முதலமைச்சர் என்று ஏன் சொல்கிறார்கள்?’’ என்று கேட்டார் காந்தியார்.

உடனே, ஓமந்தூரார்  ஒரு புள்ளிவரத்தை காந்தியாரிடம் கொடுத்தார். ‘‘இந்த ஆண்டு இன்ஜினியரிங் காலேஜில்  நடந்திருக்கிற அட்மிஷன்ஸ். இது மெடிக்கல் காலேஜில் நடந்திருக்கிற அனுமதி. இந்த இரண்டையும் பாருங்கள்’’ என்றார்.

பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள், சமுதாயத்தில் இப்போதுதான் முதல் முதலாகப் படிக்க வருகிறார்கள்!

அதைப் பார்த்த காந்தியாருக்கு அதிர்ச்சி. பார்ப்பனர்களுக்குப் பெரும்பாலான இடங்கள் கிடைத்திருந்தது. குறைந்த இடம்தான், நம்முடைய பிள்ளைகளுக்குக் கிடைத்திருந்தது. காந்தியாரிடம் ஓமாந்தூரார், ‘‘பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு உரிய வாய்ப்புக் கொடுக்கவில்லை. அப்படி இருந்தும் நான், பார்ப்பனர்களுடைய எண்ணிக்கைக்குப் பல மடங்கு அதிகமாகத்தான் கல்வி பயில வாய்ப்புக் கொடுத்துள்ளேன். பார்ப்பனர்கள் ஏற்கெனவே படித்திருக்கிறார்கள். பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள், சமுதாயத்தில் இப்போதுதான் முதல் முதலாகப் படிக்க வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு வாய்ப்பை அதி கமாகக் கொடுக்க முடியவில்லை’’ என்று காந்தியாரிடம் புள்ளி விவரத்துடன் விளக்கினார், ஓமந்தூரார்.

அன்றைக்கு, இப்போது ‘திராவிட மாடல்’ ஆட்சியில்   இருப்பதுபோன்று  எங்கே பார்த்தாலும் கல்லூரிகள் கிடையாது; ஒரே ஒரு இன்ஜினியரிங் காலேஜ், சென்னை கிண்டி இன்ஜினியரிங் காலேஜ் தான்.  இரண்டு, மூன்று மெடிக்கல் காலேஜ்கள்தான் இருக்கும்.

இந்தத் தகவல்களையெல்லாம் புள்ளிவிவரத்துடன் காந்தியாரிடம் கொடுத்தவுடன், அதை முழுவதுமாகப் படித்தார் அவர்.

காந்தியாரை, மீண்டும் சந்தித்த பார்ப்பனர்கள்!

அடுத்த தடவை தமிழ்நாட்டிற்கு வந்தார்  காந்தியார். பார்ப்பனர்கள் எல்லாம் சேர்ந்து காந்தியாரைப் பார்க்க வந்தார்கள். ஏனென்றால், ஓமந்தூராரை நீக்கவேண்டும் என்பதற்காக – தலைமை சொல்லிவிட்டால், நீக்கிவிடு வார்கள் என்பதற்காகத்தான் மீண்டும் அவரைச் சந்திக்க வந்தார்கள்.

காந்தியாரைச் சந்தித்து, ‘‘நாங்கள் சென்ற முறை கொடுத்த மெமரண்டத்தைப் பார்த்தீர்களா?’’ என்று கேட்டனர் 1948 ஆம் ஆண்டு.

உடனே காந்தியாருக்குக் கோபம் வந்தது. அவர்க ளைப் பார்த்து, ‘‘உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?’’ என்றார்.

‘‘வேதம் ஓதுதல், வேதியருக்கு அழகு. மனுதர்ம சாஸ்திரப்படி,  புரோகிதம் செய்யவேண்டியதுதான் உங்கள் வேலை. வேதம் ஓத வேண்டிய உங்களுக்கு, எதற்காக டி–ஸ்கொயர்? எதற்காக அறுவைச் சிகிச்சை கருவிகள்? எதற்காக மெடிக்கல் காலேஜ்? இது மனுதர்ம தத்துவத்துக்கு விரோதம் இல்லையா? உங்கள் சாஸ்திரப்படி நீங்கள் செய்ய வேண்டிய வேலையை  விட்டுவிட்டு, அங்கே போவது ஏன்? இது நியாயமா?’’ என்று கேட்டார்.

அப்பொழுதே முடிவு செய்துவிட்டார்கள்; இனிமேல் காந்தியாரை விட்டு வைத்தால், நமக்கு ஆபத்து என்று. காந்தியார் இறந்தவுடன், ஒரு பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேசும்போது, நகைச்சுவையாக ஒன்று சொன்னார். ‘‘எவ்வளவு நாள் நீங்கள் வாழ்வீர்கள்?’’ என்று காந்தியாரிடம் கேட்டபோது, ‘‘125 ஆண்டுகள் வாழ்வேன்’’ என்று சொன்னார் காந்தியார்.

‘‘125 ஆண்டுகள் வாழ்வேன்’’ என்று  சொன்ன காந்தி யாரை, 80 வயதிலேயே காலி செய்தது யார் என்றால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்ற கோட்சே.  காந்தியாருக்கும், கோட்சேவுக்கும் என்ன சம்பந்தம்? தனிப்பட்ட பகை எதுவுமே இல்லை.

அப்பொழுதே முடிவு செய்துவிட்டார்கள், இவர்  பழைய காந்தியார் இல்லை. ஆகவே, அவரை கோட் சேவை வைத்து முடித்துவிட்டார்கள்’’ என்றார் பெரியார்!

அதைத்தான்  தந்தை பெரியார், அவருடைய டைரி யிலும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

வேதம் ஓதுவது தானே வேதியருக்கு அழகு!

பார்ப்பனர்களிடம் காந்தியார் ஒரு முக்கிய கேள்வி கேட்டார்;  ‘‘வேதம் ஓதுவது தானே வேதியருக்கு அழகு. தர்ப்பையையும், பஞ்சாங்கத்தையும் பிடிக்க வேண்டிய நீங்கள், ஏன் ஸநாதனத்தையும், வைதீக நெறிகளையும் விட்டுவிட்டு, மெடிக்கல் காலேஜ்க்கு ஸ்டெத்தாஸ்கோப்பையும், இன்ஜினியரிங் காலேஜ்க்கு   டி–ஸ்கொயரையும் எடுத்துக்கொண்டு போக  விரும்புறீர்கள்? இது நியாயம் அல்லவே! இது வருணாசிரம தர்மம் இல்லையே, ஸநாதன தர்மம்பற்றி வேறு பேசுகிறீர்களே’’ என்று கேட்டார்.

இதை அய்யா தந்தை பெரியார் அவர்கள் டைரி யில் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.  ‘‘அதுபோல் அரசு நிகழ்வுகளில்,  மதத்திற்கு வேலை இல்லை. மதம் அவர வர்களுடைய பிரச்சினை. அது அவனவன் வீட்டிற்குள் இருக்க வேண்டும்.  அரசாங்க விஷயங்களில் இணைத்துக் காட்டக்கூடாது; அரசாங்கம் என்பது பொதுவானதாகும்’’ என்கிறார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை

அரசியலமைப்புச் சட்டத்தினுடைய முகப்பிலேயே ‘We the People’ என்று ஆரம்பிக்கும் போது, SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC   அப்படின்னு எடுத்து சொல்லப்பட்டுள்ளது. ஓர் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்றால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மதச்சார்பற்று இருக்கவேண்டும். அரசி யலமைப்புச் சட்டத்திேலயே இது வந்துவிட்டது.

ஆனால், ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கொள்கை என்ன? இந்தியா பன்மதங்கள் உள்ள நாடு. இந்து மதம் பெரும்பான்மையாக இருக்கலாம்; எல்லா மதங்களும் இருக்கின்றன. இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்; கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். எங்களைப் போன்று மத மற்றவர்கள் இருக்கிறார்கள். மதத்தை ஏற்காதவர்கள் இருக்கிறார்கள். புத்தர் கொள்கையில் இருக்கிறார்கள்.  ஆனால், எல்லோரும் குடிமக்கள். எந்த குடிமக்கள்? இந்திய குடிமக்கள். இந்திய நாட்டு குடிமக்கள். அப்படி இருக்க வேண்டும் என்று சொன்ன உடனே, இல்லை, இல்லை;  நாங்கள் மெஜாரிட்டி என்கிறார்கள்.

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சொல்கிறார், ‘‘இந்தியா, ஹிந்து நாடு’’ என்று.

ஏன் நாங்கள் ஆர்.எஸ்.எஸ்.சை எதிர்க்கிறோம்? தனிப்பட்ட முறையில் அவர்களுக்கும், எங்களுக்கும் விரோதமா? இல்லையே!   பி.ஜே.பி.க்குப் பதிலாக நாங்கள் போய் நேராக முதலமைச்சராகத்தான்  உட்காரு வோம் என்று. சில பேர் இருக்கிறார்கள், நேராக முதல மைச்சர்தான்; சட்டப்பேரவை உறுப்பினர் ஆக வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.  படுக்க வேண்டும் என்றால்கூட, நின்று,  உட்கார்ந்து, பிறகு படுக்க மாட்டார்கள்; நின்ற உடனே படுக்க வேண்டும்;  கீழே விழுந்தால் அடிபடுவது  அதிகமாக இருக்கும் என்பதுகூடப் புரியாதவர்கள். ஆகவே,  அரசியல் அனுப வம் இல்லாத கத்துட்டிகளுக்குச் இது சாதாரணமாக இருக்கலாம்; மற்றவர்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆகவே,  யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம். ஆசைக்கு ஓர் அளவே இல்லை. ஆனால், ஆசைப்படு வதற்கு முன்பு, தன்னுடைய தகுதி என்ன? தன்னுடைய தலைமைத் தகுதி என்ன? என்று பார்க்கவேண்டும் அல்லவா! எனக்கும் ஆசைதான், பளு தூக்குகின்ற ஒருவரைப் பார்க்கிறேன்; அவர் முதல் பரிசு வாங்குகிறார்.  அந்த முதல் பரிசை வாங்கவேண்டும் என்று எனக்கும் ஆசைதான். ஆனால், என்னால், அது முடியுமா? ஆசை தான் இருக்கலாமே தவிர, நான் பளு தூக்க வேண்டும் என்று நினைத்தால், என் முதுகு பிய்ந்து போய்விடும்.

வகுப்புவாரி சமூகநீதி மண்தான் தமிழ்நாடு என்று நாம் நிரூபிக்க வேண்டும்!

நீங்கள் இந்த உதாரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு உதாரணத்தை உங்களுக்குச் சொன்னால் போதும். ஏன் நாம் ஏமாறக்கூடாது? அடுத்து வரக்கூடிய தேர்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் மீண்டும் இது பெரியார் மண்தான்; சமூகநீதி மண்தான்; ஜாதி ஒழிப்பு மண்தான்; வகுப்புவாரி சமூகநீதி மண்தான் என்று நாம் நிரூபிக்க வேண்டும்.

‘‘இந்தியா ஹிந்து நாடு’’ என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதம்! 

ஆர்.எஸ்.எஸ். தலைவர் இரண்டு நாள்களுக்கு முன்பு என்ன சொல்கிறார் தெரியுமா? இதோ என் கைகளில்  இருப்பது நம்முடைய பத்திரிகை அல்ல; ‘இனமலர்’ பத்திரிகை. அந்தப்  பத்திரிகையில், ‘‘இந்தியா ஹிந்து நாடு’’ என்று அவர் சொன்னது வந்துள்ளது.  இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதம் அல்லவா! ஆனால், அதை இன்றைக்கு வெளிப்படையாகச் சொல்கிறார்.  வட இந்தியாவில் அது நடந்துவிட்டது. வட இந்தியாவில்  பித்தலாட்டங்கள் செய்து, மதவெறியை உண்டாக்கி, மதக்கலவரங்களை உண்டாக்கினர். இங்கே அமர்ந்திருப்பது போன்று அமைதியாக யாரும் அங்கே  உட்கார முடியாது.  ஒருவருக்கொருவர் என்ன ஜாதி என்று பார்த்தா இங்கு அமர்ந்திருக்கின்றோம். இல்லையே!

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அல்ல; ‘‘அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகம்!’’ 

ஆர்.எஸ்.எஸ்.சுக்கு – பி.ஜே.பி.க்கு  அடிமைகளாக இருப்பவர்களுக்குப் புரியவில்லை. கூட்டணி – கூட்டணி என்று போட்டி வைத்து, அதில் முதலில் போகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில், எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, அதற்குப்பிறகு  ஜெயலலிதா அதற்குத் தலைமை தாங்கி நடத்தப்பட்ட கட்சி, இன்றைக்கு முற்றிலும் அதற்கு மாறாக,  வெட்கப்பட வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், இப்போது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்,  அடமானம் போய், ‘‘அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகம்’’ என்றாகி, அடமான பொருள் மாதிரி ஆக்கி இருக்கிறார்கள்.  அடிமைகள் மாதிரி இருக்கிறார்கள்.

ஏதாவது கேட்க வேண்டும் என்றால், டில்லிக்கு  – அங்கேதான் போக வேண்டும் என்று சொல்கிற அளவுக்கு இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்  அம்பேத்கர் உருவாக்கி, இத்தனை ஆண்டுகள் பாடுபட்டு ஜனநாயகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடந்து வருகின்றனர்.  கட்சிகள் மாறலாம், ஆட்சிகள் மாறலாம்; ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்துத்தானே நீங்கள் எதையும் செய்ய வேண்டும்.

இதுபோன்ற நிலையில்,   ‘‘இந்தியா, ஹிந்து நாடு; இதை ஏற்க அரசியலமைப்புச் சட்டத்தின் ஒப்புதல் தேவையில்லை. நாங்களே டிக்ளர் செய்வோம்’’ என்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின்படிதான் நடப்போம் என்று பிரதமராக பதவியேற்ற மோடி உள்பட, உறுதிமொழி கூறிதான் பதவிப் பிரமாணம் எடுக்க முடியும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஏஜெண்ட்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஏஜெண்டாக இருந்து, நம்முடைய மக்களின் வரிப்பணத்தை ஊதியமாக வாங்குகின்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்பட, யாராக இருந்தாலும், குடியரசுத் தலைவரிலிருந்து, பஞ்சாயத்துத் தலைவர் வரையில், இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மீதுதான் பிரமாணம் எடுத்து பதவிக்கு வந்திருக்கிறார்கள். ஆனால்,  இந்த அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்று. இது அமலுக்கு வந்த ஒரு வாரத்தில் எழுதியிருக்கிறார்கள், ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையில். அதற்கு ஆதாரம் இருக்கிறது.

ஆகவே, இப்போது எப்படி எப்படியோ வித்தைகள் காட்டி, மீண்டும்  பித்தலாட்டம் செய்து, ஆட்சியில் நுழைந்தார்கள். நம்முடைய ஆள்களும் ஏமாந்தார்கள். மறுபடியும் ஏமாற மாட்டோம். ஒரு தடவைதான் ஏமாறலாம்; ஆனால், மறுபடியும் ஏமாற வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணியும்
வெற்றி பெற வேண்டும்!

மோடி வந்தவுடனே என்ன சொன்னார்? நம்முடைய ஆட்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். நம்முடைய மக்களுக்குத். தாய்மார்களுக்கு, சகோதரிகளுக்குப் புரிய வேண்டும். உங்களுக்குத் தெரியும் திராவிடர் கழகம் –  நாங்கள் ஏதாவது தேர்தலில் ஓரிடத்திலாவது நிற்போமா?  இவ்வளவு பேசுகிறோமே, நாங்கள் ஏதாவது ஓர் இடத்திற்கு நிற்போமா? அது மட்டுமல்ல, பஞ்சாயத்து தேர்தலில் கூட நிற்கக் கூடாது; இதுதான் எங்கள் சட்டம். அப்படி மீறி யாராவது ஆசைப்பட்டால், அவர்களுக்கு இங்கே வேலை கிடையாது. அரசியல் கட்சிக்குப் போய்விட வேண்டியதுதான். இப்படி சொல்கிற நாங்கள்தான்,  மீண்டும் மு.க.ஸ்டாலின்  முதலமைச்சர் ஆகவேண்டும் என்கிறோம் என்றால், அது அவருக்காக அல்ல; தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணியும் வெற்றி பெற வேண்டும் என்பது, அவருக்காக அல்ல; உங்களுக்காக, உங்கள் பேரப் பிள்ளைகளுக்காக, இளம் வயதுடைய இவர்கள் எல்லாம் டாக்டர் ஆக வேண்டாமா? இவர்கள் எல்லாம் இன்ஜினியர் ஆக வேண்டாமா? அய்.ஏ.எஸ். அதிகாரியாக ஆக வேண்டாமா? மாவட்ட ஆட்சித் தலைவராக ஆக வேண்டாமா?

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *