சமையல் எரிவாயு உருளை விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.110 உயர்ந்து சென்னையில் ரூ.1,849.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் (14.2 கிலோ எடை) விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.868.50 ஆக தொடர்கிறது.
