சென்னை, டிச.31 ஹலோ எஃப்.எம். கிரீடம் விருதுக்கான பரிந்துரையில், ‘‘சிறந்த அரசியல் ஆளுமை’’க்கான பிரிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிரீடம் சூடியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் சாதனையாளர்களைப் பெரு மைப்படுத்தும் விதமாக, ஹலோ எஃப்.எம். கிரீடம் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், ‘‘சிறந்த அரசியல் ஆளுமை’’க்கான பிரி வில், பெருவாரியான வாக்குகள் அளித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் தேர்ந்தெ டுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விருதை ஹலோ எஃப்.எம். மின் தலைமைச் செயலதிகாரி ரமேஷ் முதலமைச்சரிடம் வழங்கிக் கவுரவித்தார்.
