சென்னை, டிச.31 ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேர வையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டில் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 20 ஆம் தேதி நடக்க இருக்கிறது.
இந்நிலையில் வரும் ஜனவரி 6 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
