கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 31.12.2025கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 31.12.2025

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* உத்தரகாண்டில் கொலை செய்யப்பட்ட திரிபுரா மாணவன் அஞ்சல் சாக்மா தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.

* மாணவன் கொலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘நான் என் நண்பர்களை மதத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டுமா?’: பரேலி கபேயில் சங்கி குண்டர்கள் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை சீர்குலைத்த பிறகு பிறந்த நாள் கொண்டாட அழைப்பு விடுத்த பெண் செவிலியர் கேள்வி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* எஸ்அய்ஆர் ஒரு ‘பெரும் ஊழல்’, இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டால் டில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சபதம்.

* திராவிட இயக்கம் பெண்களின் அடிமைத்தன விலங்குகளை உடைத்தது, சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ பெண்கள் இருப்பதை பாஜக விரும்பவில்லை; திமுக 2.0 ஆட்சி பெண்களுக்கானதாக இருக்கும்: திமுக மகளிர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

தி இந்து:

* மெட்ராஸ் பல்கலைக்கழக மசோதா குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பினார்: மாற்று வழிகள் இருப்பதாகவும், இறுதி முடிவு விரைவில் முதலமைச்சரால் எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.

* வளர்ச்சி, தனிநபர் வருமானம் மற்றும் மனித மேம்பாடு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் போது, மாநிலத்தின் கடன் ஏன் அவ்வளவு ‘ஆபத்தானதாக’ தெரியவில்லை? மேலும், வருவாயில் 75% மாநிலத்தின் சொந்த வளங்களிலிருந்து வரும்போது, நிலுவையில் உள்ள கடன் குறித்த விவாதங்களில் வரி வசூலிக்கும் திறன் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி முறை எவ்வாறு கருத்தில் கொள்ளப்பட வேண்டும்? விளக்குகிறது சல்மான் சோஷ் கட்டுரை.

* ‘திருத்தணி தாக்குதலுக்கு வட இந்திய அடையாளம் காரணம்  அல்ல’ வட மண்டல காவல்துறைத் தலைவர் ஆஸ்ரா கார்க் பேட்டி.

தி டெலிகிராப்:

* குருகிராமில் கட்டுமானத்தில் உள்ள தேவாலய இடம் பஜ்ரங் தள், வி.ஹெச்.பி. குண்டர்களால் ‘நாசப்படுத்தப்பட்டது’, காவல்துறை பாதுகாப்புப் பணியை தீவிரப்படுத்திஉள்ளது

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மகாராஷ்டிரா பாஜக கூட்டணியில் விரிசல்: ‘நம்பிக்கைத் துரோகம்’: பிஎம்சி தேர்தலுக்கான மகா அஜூதி தொகுதிப் பங்கீட்டில் இருந்து ஆபிஅய்(ஏ) விலக்கப்பட்டதற்கு ராம் தாஸ் அதாவாலே கருத்து; 38 தொகுதிகளில் போட்டியிட முடிவு. பொங்குகிறார் ஆர்.பி.அய்.(ஏ) கட்சியின் தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ராம்தாஸ் அதாவாலே.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *