செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்‎ ‎முதலமைச்சரிடம் கோரிக்கை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‎ செய்யாறு, டிச. 30- ‎ திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மறைந்த மேனாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ‎கலைஞரின் சிலை அரசு கலைக் கல்லூரி அருகில் ஆற்காடு சாலையில் பைபாஸ் சாலை சந்திப்பில் 11 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞரின் சிலையை திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 27.12.2025 அன்று திறந்து வைத்தார்.

‎முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு செய்யாறு தொகுதி சார்பில் அமைச்சர் எ.வ.வேலு மேற்பார்வையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணி வேந்தன் முன்னிலையில் செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி தலைமையில் தொகுதி முழுவதும் உள்ள செய்யாறு மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம் செய்யாறு நகரம், வெம்பாக்கம் கிழக்கு, மேற்கு, மற்றும் மத்திய ஒன்றியங்கள் அனக்காவூர் கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள் என தொகுதி முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

‎கலைஞரின் உருவ சிலையை திறந்து வைத்த பின்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைப் பயணமாக வந்து பொது மக்களைப் பார்த்து கையை அசைத்தப்படி உற்சாகமாக சென்றார். ‎அதன் பின்னர் ஆற்காடு சாலை, காஞ்சிபுரம் சாலை வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

‎செய்யாறுக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு எம்.எல்.ஏ.ஒ.ஜோதி 4 அடி உயரமுள்ள வெள்ளி செங்கோலை நினைவுப் பரிசாக வழங்கினார்.

மாவட்டம் கோரி முதலமைச்சரிடம் மனுக்கள்:

‎செய்யாறு மற்றும் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ‎இராணிப்பேட்டை ஆகியன வருவாய் ‎கோட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளன என்றும், இவைகளில் செய்யாறைத் தவிர்த்து மற்றவை மாவட்டங்களாக செயல்பட்டு வருவதாகவும், ‎கடந்த 66 ஆண்டுகளாக சார் ஆட்சியர் அலுவலகத்தை செய்யாறு தொகுதி மக்களின் நலன் கருதி ‎செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கலைஞர் சிலைத் திறப்பு விழாவிற்கு செய்யாறுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை அடங்கிய மனுக்களை  ‎செய்யாறு நகர அனைத்து வணிகர்கள் சங்கம் மற்றும் மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் அளித்தனர்.

‎பதாகைகள் மூலம் பதிவு:

‎செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரி பதாகைகளில் கைகளில் ஏந்தியும் படியும், பேனர்களை தொங்கவிட்டும் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

‎இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி, கழக மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வ.அன்பழகன், ஆர்.டி.அரசு, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், மாவட்ட துணை செயலாளர் க.லோகநாதன், பார்வதி சீனிவாசன், உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *