அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
விருதுநகர், நவ. 7- இலங்கையில் மலையக தமிழர்கள் தொடர்பான நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை ஒளி பரப்பப்படாததற்கு திமுக, மதிமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இலங்கையில் மலையகத் தமி ழர்கள் தொடர்பான ‘நாம் 200’ நிகழ்ச்சி, இலங்கை -_- இந்திய அர சின் பங்களிப்புடன், இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டை மானால் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், மலையகத் தமிழர்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கியிருந்தார். ஆனால், இந்த வாழ்த்துரை ஒளிபரப்பப்படாதது தற்போது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
இந்நிலையில், வாழ்த்துரை ஒளிபரப்பப்படாததற்கு திமுக சார்பில் செய்தித் தொடர்பு பிரிவு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோ வன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித் துள்ளனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
இதற்கிடையே, முதலமைச் சருக்கு பதில் இலங்கை செல்ல இருந்த தங்கம் தென்னரசு, தனது பயணத்தை ரத்து செய்தார். இது தொடர்பாக விருதுநகரில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
முதலமைச்சருக்குப் பதில் நான் இலங்கை செல்வதற்காக, ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையில் இருந்து உரிய அனுமதியைப் பெற கடந்த அக்.28ஆ-ம் தேதி பொதுத் துறை விண்ணப்பித்தது. பயண ஏற்பாடுகளைச் செய்துவிட்டு ஒன்றிய அரசின் அனுமதிக்கு காத் திருந்தேன்.
நவ.1ஆ-ம் தேதி இரவு 9 மணி வரை அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி வராததால், பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பி னேன். ஆனால் இரவு 9.30 மணிக்கு மேல் அனுமதி வந்துள்ளது.
அதன்பின், நவ.2-ஆம் தேதி காலை 11 மணிக்கு இலங்கையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, முதலமைச்சரின் வாழ்த்து செய்தியை அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர்.
அதன்படி உடனடியாக பகல் 2 மணிக்குள் வாழ்த்துச்செய்தி அனுப்பப்பட்டது. இந்த வாழ்த் துச் செய்தி அங்குள்ள செய்தி நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட் டுள்ளது. ஆனால் என்ன கார ணத்தினாலோ முதலமைச்சரின் வாழ்த்துச் செய்தி நிகழ்ச்சியில் ஒளி பரப்பப்படவில்லை. அதற்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. அதை உங்கள் யூகத்துக்கு விட்டு விடுகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.