விருதுநகர், டிச. 29– விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவாசான் தந்தை பெரியார் நினைவு நாளை யொட்டி, 28.12.2025 அன்று காலை 10 மணிக்கு விருதுநகர் பொன்மேனி அரங்கில் குழந்தை உளவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைத் தலை வர் ந.ஆனந்தம் தலைமை உரையாற்றினார். மாவட்ட ப.க. அமைப்பாளர் மா.பாரத் வரவேற் புரையாற்றினார். மாவட்ட கழக தலைவர் கா.நல்லதம்பி தொடக்கவுரையாற்றினார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை குழந்தை உளவியலாளர் முனைவர் ந.அகில் “குழந்தைகளுக்கான தண்டனையற்ற ஒழுக்க மேம்பாட்டு முறைகள்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து தோழர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்தார். மாவட்ட கழக மகளிரணிச் செயலாளர் பொன்மேனி ராஜயோகம், பொதுக்குழு உறுப்பினர் வெ.முரளி, துணைத் தலைவர் பா.இராசேந்திரன், இளைஞரணித் தலைவர் க.திருவள்ளுவர், க.எழிலன், விருதுநகர் பெ.த.சண்முகசுந்தரம், ச.இனியன், மருத்துவர் ந.எழில், கு.கணேசமூர்த்தி, செந்தில்குமார், மாணிக்க ராஜ், அருப்புக்கோட்டை சங்கரராஜ் மற்றும் தோழர்கள் நண்பர்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மாவட்டக் கழகச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் நன்றி கூற கருத்தரங்கம் நிறைவுற்றது
