29.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாடு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு பொங்கல் பரிசு: வேட்டி, சேலையுடன் பணமும் தர இருப்பதாக தகவல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நமது பலம் குறைவாக இருக்கலாம். ஆனால் நமது முதுகெலும்பு இன்னும் நேராகவே இருக்கிறது. நாங்கள் அரசியலமைப்பு சட்டம், ஏழைகளின் உரிமைகள், மதச்சார்பின்மையில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை, காங்கிரஸ் கட்சியின் 140ஆம் ஆண்டு நிறுவன நாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘ஆர்.எஸ்.எஸ் வெறுப்பின் அடிப்படையில் கட்டப்பட்டது… அல்-கொய்தாவிடமிருந்து நீங்கள் எதையாவது கற்றுக் கொள்ள முடியுமா?’, செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அதிரடி பதில்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* விஜய்-யின் த.வெ.க., சீமானின் நா.த.க.. கட்சிகள் மறைமுகமாக பாஜக – ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாருக்கு உதவுகின்றன, என வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம்.
தி டெலிகிராப்:
* சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் (கிராமப்புறம்) சட்டம், முக்கியமான கள அளவிலான தரவுகளை அர சாங்கம் மறைத்து வைப்பதற்கு வழிவகுத்துள்ளது என்று ஒரு தனியார் ஆராய்ச்சி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
– குடந்தை கருணா
