புதுக்கோட்டை, டிச. 29– தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 21.12.2025 ஞாயிறு காலை 10 மணியளவில் புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடை பெற்றது.
முதல் பரிசு
ரூ.3 ஆயிரம்
ரூ.3 ஆயிரம்
போட்டிக்கான முதல பரிசாக ரூ.3000 ப.க. மாவட்ட அமைப்பாளர் தி.குணசேகரன், இரண்டாம் பரிசாக ரூ.2000 பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ச.ஆர்த்தி முருகவேள், மூன்றாம் பரிசாக ரூ.1000 பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வி.பார்த்தசாரதி ஆகியோர் வழங்குவதாக அறிவிப்புச் செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு மாவட்ட ப.க. சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது. இப்போட்டியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் போட்டி யாளர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்பேச்சுப் போட்டிக்குத் தலைப்புகளாக பெரியாருக்கு முன்னும்… பெரியாருக்கு பின்னும், பெரியார் ஒரு கேள்விக் குறி? ஒரு ஆச்சரியக்குறி!, எப்போதும் தேவை பெரியாரே!. இடஒதுக்கீடு… ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, நம்மை எதிர்நோக்கும் பிரச்சினைகள், பெரியார் இல்லாவிடில் இன்றும்… நாளையும்… நம் நிலை என்ற ஆறு தலைப்புகளும் மாணவர்களுக்கு 5 மணித்துளி களும் ஒதுக்கப்பட்டு அறிவிக் கப்பட்டிருந்தது.
அறிவிக்கப்பட்ட ஆறு தலைப்புகளிலும் ஒவ்வொரு மாணவரும் தனித்தன்மையோடும் ஆச்சரியப் படுத்தக்க வகையிலும் அரங்கம் அதிரப் பேசிக் கைதட்டல்களைப் பெற்றனர். வருகை தந்த அனைவரையும் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் இரா.மலர்மன்னன் வரவேற்று உரையாற்றினார். முன்னிலையேற்ற மாவட்ட கழகத் தலைவர் முனைவர் மு.அறிவொளி, மாநகர கழகத் தலைவர் அ.தர்மசேகர், பெரியார் பெருந்தொண்டர் எஸ்.பாபு ராஜேந்திரன், மாநில பகுத்றிவாளர் கழக அமைப்பாளர் பொன்னமராவதி அ.சரவணன், பணி ஓய்வு தலைமையாசிரியர் ச.ஆர்த்தி முருகவேள், பொன்னமராவதி ஒன்றிய கழக செயலாளர் வீ.மாவலி ஆகியோர் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51ஏ(எச்) குறித்தும், அதன்டிப்படையில் இயங்கும் பகுத்தறிவாளர் கழக செயல் பாடுகள் குறித்தும் கழகப் புரவலர் அவர்களின் முயற்சி யால் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீடு குறித்தும், நாம் அடையும் பலன்களையும், தந்தை பெரியார் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகளையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி உரையாற்றினர்.
மாவட்ட ப.க. செயலாளர் இரா.வெள்ளைச்சாமி நன்றி கூறி உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் அன்னவாசல் சம்பத், அரிமளம், இந்திரஜித் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்றவர்கள் விவரம்
முதலிடம் – சா.ரவீந்திரன் (அன்னை கல்லூரி, புதுக்கோட்டை)
இரண்டாம் இடம் – ரா.ரசுரீனா பிர்தவுஸ் (கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை)
மூன்றாமிடம் – வீ.ஜெயலட்சுமி (கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி, புதுக் கோட்டை
சிறப்புப் பரிசு – ம.மனோஜ்கிரண் (அரசு கல்வியியல் கல்லூரி, புதுக் கோட்டை)
