சிறிது நேரத்தில் ஏற்கெனவே கொடுத்த ‘பெரியார் உலகம்’ நன்கொடை இல்லாமல், கூடுதலாக 5 லட்சம் தற்போது வசூலாகியுள்ளது என்று கைப்பேசி வழியே தகவல் கொடுத்து சுமார் 5 கி.மீ. விரட்டி வந்து மாவட்டக் கழகத் தோழர்கள் தொகையை கழகத் தலைவரிடம் ஒப்படைத்து, ‘பெரியார் உலகம்’ நன்கொடையை ரூ.19 லட்சம் ஆக்கி, பின்னர் விடைபெற்றுச் சென்றனர்.
10 டிகிரி கடும் குளிரிலும்,
ஒரே நாளில் 736 கி.மீ. நெடிய பயணம்!
கழகத் தலைவரின் பயணம் தொடர்ந்தது. வழி யில் சுமார் 10 மணியளவில் இரவு உணவு எடுத்துக் கொண்டார். அடுத்த நாள் அதிகாலை 3 மணியளவில் அடையாறு இல்லத்திற்குத் திரும்பினார். இந்த ஒரு நாளில் மட்டும் 736 கி.மீ.. 10 டிகிரி கடும் குளிரிலும் தனது 93 வயதிலும் நெடிய பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பி டத்தக்கது.
