சென்னை, டிச. 28– தமிழ் நாட்டில் நடைபெறவுள்ள தேர் தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மிகத் துல்லியமாகவும் வேகமாக வும் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை களை எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தமிழ் நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளை (Assistant Electoral Registration Officers – AERO) நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பணிகளை எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை குறைந்த அளவிலேயே இருந்த அதிகாரிகளின் எண்ணிக்கை, தற்போது பணிகளின் சுமைக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு குறைந்தபட்சமாக 5 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரிய தொகுதிகள் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் அதிக பட்சமாக 20 அதிகாரிகள் வரை நியமிக்கப் பட்டுள்ளனர்.
பொதுவாக ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 15 அதிகாரிகள் வரை பணிகளைத் தீவிரப்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.
துரித நடவடிக்கை
வாக்காளர்கள் விண்ணப்பிக்கும் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் விசாரணை நடத்தி தீர்வு காண இந்த கூடுதல் நியமனம் உதவும்.
இரட்டைப் பதிவு மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கி, பிழையற்ற வாக்காளர் பட்டியலை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
கண்காணிப்பு
ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி அதிகாரிகள் ஒதுக்கப்படுவதால், பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு முழுமையான கண்காணிப்பு உறுதி செய்யப்படும்.
தமிழ்நாடு முழுவதும் இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
