அதிவேகமாக வாகனங்களை ஓட்டுகின்றீர்களா? ரேடார் மூலம் கண்காணிப்பு சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் எச்சரிக்கை

3 Min Read

தமிழ்நாடு

சென்னை,நவ.7- போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய சென்னையில் சிறப்புத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதாக போக்கு வரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நெரிசலை தடுக்க போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு தொடர் நடவடிக் கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வாகனங் களுக்கான வேக வரம்பை உயர்த்தி சென்னை போக்குவரத்து காவல் துறையினர் கடந்த 1-ஆம் தேதி உத் தரவு பிறப்பித்தனர். 4.11.2023 முதல் அது பயன்பாட்டுக்கு வந்தது.

இதுகுறித்து சென்னை போக் குவரத்து காவல் கூடுதல் ஆணை யர் ஆர்.சுதாகர்  செய்தியாளர் களிடம் கூறியதாவது: அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சாலை கட்டமைப்புகளின் முன்னேற்றம் காரணமாக வாக னங்களின் வேக வரம்பு 20 ஆண்டு களுக்கு பிறகு உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 6 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டது. இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், மும்பை, டில்லி, பெங்களூரு, அய்தராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் வேக வரம்பு மற்றும் சாலை விபத் துகளின் எண்ணிக்கை போன்ற காரணிகள் பகுப்பாய்வு செய்யப் பட்டது. அதுமட்டும் அல்லாமல் அய்அய்டி மெட்ராஸ் மற்றும் அனுபவம் வாய்ந்த பேராசிரியர் களுடன் போக்குவரத்து அமைப்பு மற்றும் சாலை வடிவமைப்பை பொறுத்து வாகனங்களின் புதிய வேக வரம்பு நிர்ணயிக்கப்பட் டுள்ளது.

அதன்படி, இலகுரக வாக னங்கள் (கார், மினி ஆட்டோ, மினி வேன்) மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும், கனரகவாகனங்கள் (பேருந்து, லாரி, டிரக்குகள்) 50 கி.மீ. வேகத்திலும், இருசக்கர வாக னங்கள் 50 கி.மீ. வேகத்திலும், ஆட்டோக்கள் 40 கி.மீ. வேகத் திலும் செல்லலாம். குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகை வாக னங்களும் 30 கி.மீ. வேகத்துக்குள் தான் செல்ல வேண்டும்.

சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டும், விரைவான பயணத் துக்காகவும் இந்த முயற்சி எடுக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பான பய ணமே எங்களது நோக்கம். அதற் கான பரிந்துரையே இந்த வேக வரம்பு நிர்ணயம்.

நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் தான் வாகனங்கள் இயக்கப்படு கிறதா என்பதை வேக கட்டுப்பாடு கருவி மற்றும் ரேடார் மூலம் கண்காணித்ததில் முதல் நாளில் விதிமீறலில் ஈடுபட்டதாக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன.

போக்குவரத்து நெரிசல், வாகன அடர்த்தியை நவீன தொழில் நுட்பம் மூலம் கண்காணிக்கிறோம். அதை அடிப்படையாக வைத்து போக்குவரத்து மாற்றங்கள் படிப் படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு 70 சதவீதம் பேர் ஆதரவும், 30 சதவீதம் பேர் எதிர்ப் பும் தெரிவித்துள்ளனர். எழும்பூ ரிலிருந்து விமான நிலையம் செல்ல முன்பு ஒன்றரை மணி நேரம் ஆனது.

தற்போது 40 நிமிடத்தில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய சென்னையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் படிப் படியாக நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது.

விழாக் கால நெரிசலை குறைக்க இப்போதே நடவடிக்கை எடுத் துள்ளோம். அரசுப் பேருந்துகள் விதி மீறலில் ஈடுபடுகிறதா என் பதையும் தனிப்படை அமைத்து கண்காணிக்கிறோம். பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்கள் செல்லவும் தனிப்பாதை அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

மாணவர்கள் பேருந்தில் படிக் கட்டு பயணங்களை தடுக்க நட வடிக்கை எடுத்துள்ளோம். இவ் வாறு கூடுதல் காவல் ஆணையர் சுதாகர் தெரிவித்தார். இணை ஆணையர் மயில்வாகனன் உள்  ளிட்டோர் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *