28.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* 100 நாள் வேலை திட்டம் ரத்து ஜன.5இல் நாடு தழுவிய போராட்டம் தொடக்கம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்,
* விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது அதிமுக, எடப்பாடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப்படுத்தி கண்டனம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மோடி அரசு மாற்றியுள்ள விபி.ஜி.ராம்.ஜி திட்டத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் வெடிக்கும், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் எச்சரிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சிபிஅய்-யிடம் புகார் அளித்துள்ளார்; வழக்கை விசாரிக்கும் அதிகாரி, குற்றச்சாட்டப்பட்ட செங்காருடன் ‘கூட்டுச் சேர்ந்துள்ளதாக’ குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குஜராத் அகமதாபாத் மாலில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு அலங்காரங்களை ‘பகவா சேனா’ அமைப்பினர் சேதப்படுத்தினர்; அய்ந்து பேர் கைது.
தி இந்து:
* தமிழ்நாட்டின் வளர்ச்சி நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சாலைப் பேரணியின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாததால், ஒன்றிய அமைச்சர்களே மாநிலத்திற்கு எதிராக வெறுப்பை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘1%க்கும் குறைவான கிறிஸ்தவர்கள்’: டெல்லி அருகே உள்ள குருகிராமில் தேவாலயம் கட்டுவதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் எதிர்ப்பு; கிறிஸ்துமசுக்கு எதிரான நாசவேலைகளை தொடர்ந்து இந்தச் சம்பவம்
– குடந்தை கருணா
