டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.15 பைசா குறைந்து, ரூ.89.86 என வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்துள்ளது. இந்த சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
ஜன.20-இல் தமிழ்நாடு
சட்டப்பேரவை கூடுகிறது
2026-ஆம் ஆண்டின் முதல் சட்டப் பேரவை கூட்டத்தொடர் ஜன.20-இல் கூடுகிறது என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். ஆளுநர் ஒப்புதலுடன் காலை 9:30 மணிக்கு பேரவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கவுள்ளார். அன்றே சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என்றும் அப்பாவு கூறியுள்ளார்.
