தற்கொலையை கேலி செய்வதா?: மோடிக்கு பிரியங்கா கண்டனம்

1 Min Read

புதுடில்லி, ஏப். 28- பிரதமர் மோடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர் பேசுகிற போது தமாஷாக ஒரு விஷ யத்தைச் சொன்னார். 

ஒரு பேராசிரியரின் மகள் தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள். மக ளின் தற்கொலை குறிப்பை வாசித்த தந்தையான பேராசிரியருக்கு மிகுந்த வருத்தம். என்னவென்று தெரியுமா? “என் மகளுக்கு இவ்வளவு காலம் நான் முயற்சி செய்து கற்பித்து வந்தும்கூட, தற்கொலைக் குறிப்பில் எழுத்துப்பிழை இருக்கிறதே?” என்று. இது தான் பிரதமர் செய்த தமாஷ். இங்கே மகள் இறந்து விட்ட கவலையை விட பேராசிரியருக்கு மகள் எழுதிய தற்கொலைக்குறிப் பில் எழுத்துப்பிழை இருக் கிறதே என்றுதான் கவலை.

தற்கொலையை வைத்து பிரதமர் மோடி இப்படி தமாஷ் செய்ததற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்ட னம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடி பேச்சின் காட்சிப் பதிவை இணைத்து ஒரு கருத்துப் பதிவையும் வெளியிட்டுள் ளார். அந்தப் பதிவில் பிரி யங்கா காந்தி கூறி இருப்ப தாவது:- மன உளைச்சலுக் கும், தற்கொலைக்கும் ஆளா வது, அதிலும் குறிப்பாக இளம்வயதினர் இவற் றுக்கு ஆளாவது சிரிப்பதற் குரிய விடயம் அல்ல.தேசிய குற்ற ஆவணக்காப்பகத் தின் (என்.சி.ஆர்.பி.) புள்ளி விவரத்தின்படி, 2021ஆ-ம் ஆண்டில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற் கொலை செய்து கொண்டு உள்ளனர். அவர்களில் பெரும்பான்மை சதவீதத் தினர் 30 வயதுக்கு உட் பட்டவர்கள் ஆவார்கள். இது துயரம்தானேயன்றி சிரிப்பதற்குரிய தமாஷ் அல்ல. இந்த தமாசுக்கு பிர தமரும், அவரது தமாசைப் பார்த்து மனம் விட்டுச் சிரித்தவர்களும், இந்த வேதனைக்குரிய மனநல ப் பிரச்சினைகளை ஏளனம் செய்வதற்குப் பதிலாக தங்களை நன்றாகப் பயிற்று வித்துக்கொண்டு, தற்கொ லைக்கு எதிராக விழிப்பு ணர்வு ஏற்படுத்துவது நல்லது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *