சென்னை, டிச. 27- காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024-2025ஆம் கல்வியாண்டு பொதுத்தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுத் தந்த 959 பாட ஆசிரியர்களைப் பாராட்டும் விதமாக, பள்ளி கல்வித்துறை சார்பில் சிறப்பு விருது வழங்கும் விழா நேற்று (26.12.2025) நடைபெற்றது.
சந்தவேலூர் பகுதியில் நேற்று (26.12.2025) நடைபெற்ற விழாவில் ஆட்சியர் கலைச்செல்வி, முதன்மை கல்வி அலுவலர் அ.நளினி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எழில், மாவட்டகல்வி அலுவலர்கள் காந்திராஜன், கோமதி பங்கேற்றனர்.
