மோடியின் முனை மழுங்கிய புதிய தேர்தல் ஆயுதங்கள்!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மேற்குவங்கத்தில் பங்கிம் சந்திரா முதல் தமிழ்நாட்டில் ஏ.அய். பொங்கல் அரசியலும்!

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனுடன் தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரிக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் மிக முக்கியமானது என்னவென்றால்; மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மூன்றுமே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள். அதேநேரத்தில், பாஜகவின் கொள்கைகளுக்கு நேர் எதிரான கொள்கைகளைக் கொண்ட திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி ஜனநாயக அமைப்புகள் இங்கே ஆட்சியில் உள்ளன.

நாடாளுமன்ற நேரம் வீணடிப்பு

இதில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரண்டும் பாஜகவின் முக்கியக் குறியாக உள்ளன. மேற்கு வங்கத்தை வளைத்துப் போட, பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ”வந்தே மாதரத்தை” கையில் எடுத்துள்ளார் மோடி. நாடாளுமன்றத்தில் – வந்தே மாதரம் 150 – என்று கூறி, இரண்டு நாட்கள் நாடாளுமன்றத்தின் பொன்னான நேரத்தை அவர் வீணடித்தார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில், ‘வந்தே மாதரம்’ குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அன்றைய நிலைப்பாட்டை வரலாற்றுச் சான்றுகளோடு எடுத்து வைத்தனர். மேலும் பேச சரக்கு இல்லாததால், “நான்கு நாள் சுற்றுப்பயணம்” என்று கூறி மோடி வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார். வெளிநாட்டிலிருந்து வந்த உடனே, மேற்கு வங்கத் தேர்தல் பரப்புரைக்குச் சென்றார். அங்குள்ள நதியா மாவட்டத்தில் மிகப்பெரிய பரப்புரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பனிமூட்டம் காரணமாக அவரது ஹெலிகாப்டர் இறங்கவில்லை.

23 முறை – வந்தே மாதரம்

இருப்பினும், அவர் கொல்கத்தா திரும்பி, அங்கிருந்தே கைப்பேசி மூலமாகப் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்படிப் பேசிய அவர், 23 முறை “வந்தே மாதரம்” என்றும், 8 முறை “பங்கிம் சந்திர சாட்டர்ஜி” என்றும் பெயர்களை உச்சரித்தார். 2021-ஆம் ஆண்டு மேற்கு வங்கத் தேர்தலில், ரவீந்திரநாத் தாகூர் போல் வேடமிட்டு, அவரைப் போலவே நீண்ட தாடியை வளர்த்து, கால் வரை தொங்கும் துண்டோடு பரப்புரை செய்தார். ஆனால், அது பலனளிக்கவில்லை. ஆகையால், இம்முறை பங்கிம் சந்திர சாட்டர்ஜியைக் கையில் எடுத்துள்ளார்.

திருப்பரங்குன்றமும் ஏ.அய். பொங்கலும்!

தமிழ்நாட்டில், திருப்பரங்குன்றம் விவகாரம் மூலம் பெரிய பிரச்சினையைக் கிளப்பித் தேர்தல் ஆதாயம் தேட மோடி தயாராகிவிட்டார். சமீபத்தில் பல்வேறு குடும்பச் சிக்கலால் இறந்த நபரை, “தீபத்தூண் ஏற்றப் போராடித் தீக்குளித்து உயிர்நீத்தார்” என்று கூறி, தமிழ்நாடு முழுவதும் இரங்கல் சுவரொட்டி ஒட்டி வருகின்றனர். தமிழ்நாட்டிற்கு விரைவில் வருகை தரும் அமித்ஷா, மதுரைக்குச் சென்று தீக்குளித்த நபரின் வீட்டிற்கு நேரில் ஆறுதல் கூறி, நிதியுதவி அளிப்பார் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.

மொழிபெயர்ப்பு மென்பொருள் தயாராகிறது

அதுமட்டுமா? மோடி எப்போதும் இல்லாத கூத்தாக, இந்த ஆண்டு பொங்கல் விழாவின் மூன்று நாளும் தமிழ்நாட்டிலேயே ‘டேரா’ போட உள்ளார். “சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்பது போல, அவர் இங்கே பொங்கல் சாப்பிடவோ, கரும்பு தின்னவோ வரவில்லை. அவருக்காகச் சிறப்பு ஏ.அய். மொழி மென்பொருள் (Translation AI Software) ஒன்றை தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது. அதாவது, அவர் ஹிந்தியில் பேசினால், அதனைச் சில விநாடிகளிலேயே தமிழில் அப்படியே கூறும் வகையில் அந்த மென்பொருள் தயாரிக்கப்படுகிறது.

இதனைப் பரிசோதனை செய்து பார்க்கும் விதமாக, மோடி மூன்று நாள் மக்களோடு பேசிச் சோதனை செய்யப் போகிறாராம். தான் ஹிந்தியில் பேச, அது தெளிவான தமிழில் மக்களிடம் சென்று சேர்கிறதா என்று பார்க்கவே அவர் தமிழ்நாட்டில் சுற்றுகிறார். இந்தச் சோதனை வெற்றி பெற்றால், வட இந்தியாவில் கையை ஆட்டி, தலையைத் திருப்பி, குனிந்து நிமிர்ந்து கத்திக் கத்திப் பேசுவதை இங்கேயும் பேசலாம் என்ற தீர்க்கமான முடிவோடுதான் இறங்கியுள்ளார்.

ஆனால், ஹிந்தி பல மொழிகளின் கலப்பு; தமிழ் தனித்துவமான மொழி. ஆகையால், மோடியின் ‘தமிழ் பேச்சு மென்பொருள் சூழ்ச்சி’ 30 விழுக்காடு கூடப் பயன் தராது. இதை மோடியிடம் சொல்லும் துணிச்சல் தான் அங்கே யாருக்கும் இல்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *