தஞ்சை, டிச. 26- தஞ்சை பழைய பேரூந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்கலைக்கழக பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 52 ஆம் ஆண்டு நினைவு நாள் (24.12.2025) முன்னிட்டு பல்கலைக்கழக நுழைவு வாயிலில் உள்ள பெரியார் சிலைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா வெ.இராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதிய பேரூந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேரா இரா. மல்லிகா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வல்லத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்கலைக் கழக முதன்மையர் கட்டட எழிற்கலைத் துறை பேரா சி.வி.சுப்ரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், இயக்குநர்கள், பணியாளர்கள், கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
