தஞ்சை குரல் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியாரின் 52ஆவது நினைவு நாளை முன்னிட்டு படிப்பகப் புரவலர் பொற்கோவன் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் அ.ரகமதுல்லா,தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நெல்லு பட்டு இராமலிங்கம், படிப்பக செயலாளர் அழகு. ராமகிருஷ்ணன், பொருளாளர் பேராசிரியர் குட்டிமணி, அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் திராவிட செல்வம், ரூபிணி மஹால் சரவணன், பிசியோதெரபி மருத்துவர் சதீஷ்குமார், படிப்பக பொறுப்பாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
