கிறிஸ்துமஸ் தொப்பி விற்றதால் மிரட்டல்
ஒடிசாவில் கிறிஸ்துமஸ் தொப்பிகளை விற்ற வியாபாரிகளை, ஒரு கும்பல் மிரட்டும் காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது. அதில், ‘இது இந்து ராஷ்டிரம்; கிறிஸ்தவ பொருள்களை விற்கக்கூடாது’ என அந்த கும்பல் வாக்குவாதம் செய்ய, ராஜஸ்தானை சேர்ந்த அந்த வியாபாரிகள், பிழைப்புக்காகவே விற்கிறோம் என கெஞ்சியுள்ளனர். ஆனால் அதை கேட்காத கும்பல், ஜெகந்நாதர் தொடர்பான பொருள்களை மட்டுமே விற்க வேண்டும் என கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பலமுறை கமிஷன் வாங்கி இருக்கேன்: ஒன்றிய அமைச்சர்
பீகாரில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கமிஷன் வாங்குவதாக ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமிஷன் வாங்குவது ரகசியமில்லை எனக்கூறிய அவர், தானே பலமுறை கமிஷன் வாங்கி, அந்தப் பணத்தை கட்சி நிதிக்கும் அளித்துள்ளதாக தெரிவித்தார். தொகுதி மேம்பாட்டு நிதியில் குறைந்தபட்சம் 5% ஆவது கமிஷன் பெற அட்வைஸ் செய்தது, அவர் இடம்பெற்றுள்ள பாஜக கூட்டணியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர் உயிருடன் வந்தார்..
அதிர்ச்சி தகவல்
அதிர்ச்சி தகவல்
எஸ்.அய்.ஆர். திருத்தத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் உயிரிழந்தவரின் பெயர் இடம்பெற்றுள்ளது. அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. 2021இல் உயிரிழந்த பாடலாசிரியரும், அதிமுக மேனாள் அவைத் தலைவருமான புலவர் புலமைப்பித்தனுக்கு மயிலாப்பூரில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. இதன்மூலம், எஸ்.அய்.ஆர். பணிகளை அவசரமாக நடத்தினால் குளறுபடிகள் நடக்கும் என்பது உறுதியாகியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
