‘அய்யங்கார் குமுதம்!’

1 Min Read

ஒரு பிற்படுத்தப்பட்டவர் கையில் இருந்த ‘குமுதம்’ ஓர் அய்யங்கார் கைக்கு வஞ்சகமாக மாறினாலும் மாறியது – அதன் விளைவு ஒவ்வொரு இதழிலும் மகாபெரியவாள்பற்றி ரீல் ரீலாக கப்சாக்களை அவிழ்த்துக் கொட்டுகிறது!

‘‘சொல்லாமலே குறைதீர்த்த காஞ்சி மகான்” என்று ஒரு கதை – இந்த வாரத்தில்!

தன்னைத் தரிசிக்க வந்த ஒரு முதியவர் எதற்காக வந்திருக்கிறார் என்று ‘தூர திருஷ்டியால்’ உணர்ந்து, தன்னிடம் கல்யாணப் பத்திரிகை வைக்க வந்த ஒரு ‘பசை’யானவரை அழைத்து,  ‘‘அதோ ஒருவர் நிற்கிறாரே, அவாள் என்னை நாடி வந்த அந்த உதவியைச் செய்துகொடு” என்று சொல்ல, ‘ஆகட்டும் சாமி’ன்னு சொல்லி, ‘திருமணத்துக்குத் தேவையான கூறைப் புடவையை வாங்கிக் கொடுக்கிறோம்’ என்று ஒப்புக் கொண்டாராம்!

‘‘என்ன, நீ கேட்கணும்னு நினைச்சது கிடைச்சிடுச்சா, இப்ப சந்தோஷமா? வீட்டுக்குப் போ” என்று சொன்ன மகான், கை நிறைய குங்குமம் தந்து, ஆசீர் வதிக்க, பக்தனின் தேவையைச் சொல்லாமலே அறிந்து கொடுக்கும் தெய்வ மாகவே காட்சி தந்த மகானை கண் கலங்க வணங்கிவிட்டுப் புறப்பட்டார் அந்த முதியவர்.

இப்படி ஒரு ‘ரீலை’ விட்டுள்ளது ‘குமுதம்!’

அது சரி, இவ்வளவு ஆன்மிக தொலைநோக்குச் சக்தியுள்ள அந்தப் பெரியவாளுக்குத் தனக்குப் பின் மடத்துக்கு வரும் சங்கராச்சாரியார்கள் ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைபவர்களாக இருப்பார்கள் என்று தெரியாமல் போனது ஏன்?

பேஷ்! பேஷ்!! எத்தகைய  

‘தூர திருஷ்டி’  பெரியவாளுக்கு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *