டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் ‘ஜி ராம் ஜி’ சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: 27ஆம் தேதி நடக்கும் காங்கிரஸ் செயற்குழுவில் முடிவு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஒன்றிய அரசின் மின்சார (திருத்த) மசோதா வரைவு, 2025-க்கு எதிர்ப்பு, தனியார் மயமாக்கும் முயற்சி என தொழிற்சங்கங்கள் கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, ‘அமித்ஷா திராவிட முன்னேற்றக் கழகம்’, அந்த கட்சி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் “முழுமையாக சரணடைந்து விட்டது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்.
* ஜனநாயக அமைப்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது, எதிர்க்கட்சிகள் அதை எதிர்கொள்ள வேண்டும்: ராகுல் காந்தி
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* காந்தி படத்தை ரூபாய் நோட்டுகளில் இருந்து நீக்க மோடி அரசு திட்டமிடுகிறது, சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் குற்றச்சாட்டு; அதிகாரப்பூர்வ மறுப்புகள் இருந்தபோதிலும், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தியின் படத்தை நீக்குவது குறித்து முதல் சுற்று உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே நடத்தியுள்ளது என்று சிபிஅய்(எம்) மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கூறினார்.
* கேரளாவில் புலம்பெயர் தொழிலாளி அடித்துக் கொலை: ஆர்எஸ்எஸ் பங்கு இருப்பதாக சிபிஅய்(எம்) குற்றச்சாட்டு, பாதிக்கப்பட்டவர் ‘பங்களாதேஷி’ என்று முத்திரை குத்தப்பட்டதாகக் கூறுகிறது; பாஜக குற்றச்சாட்டை மறுக்கிறது
தி இந்து:
* ராஜஸ்தான் ஆரவல்லி மலைகளை ‘காப்பாற்ற’ ராஜஸ்தான் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன, ஆரவல்லி மலைகளின் வரையறை குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோருகின்றன, போராட்டங்களை தீவிரப்படுத்து வோம் என எச்சரிக்கை;
* ஆரவல்லி மலைகளை சுரங்க மாஃபியாக்களுக்கு ‘விற்கிறது’ மோடி அரசு என காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு.
* கமிஷன் பெற்றுக் கொள்ளுங்கள், சொல்கிறார் ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி. ஒவ் வொரு எம்.பி.யும் எம்.எல்.ஏ.வும் கமிஷன் வாங்கு கிறார்கள். 10% கமிஷன் பெற முடியாவிட்டால், குறைந்தபட்சம் 5% ஆவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசிய அவர் கூறினார். “நான் தனிப்பட்ட முறையில் எனது கமிஷன் பணத்தை பலமுறை கட்சி நிதிக்கு கொடுத்துள்ளேன். ஒரு எம்.பி.க்கு ரூ.5 கோடி கிடைக்கிறது என வாக்குமூலம்.
தி டெலிகிராப்:
* மோடி அரசு ஆரவல்லியைப் பாதுகாப்பதில் அல்ல, விற்பதில் தான் ஈடுபட்டுள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது; டிசம்பர் 26 அன்று போராட்டங்கள் திட்டம். ‘ஆரவல்லி பகுதியில் 0.19 சதவீதம் மட்டுமே சுரங்கத் தொழில் மற்றும் பிற நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று மோடி அரசாங்கம் கூறுகிறது, ஆனால் அந்த 0.19 சதவீதம் என்பது சுமார் 68,000 ஏக்கர் ஆகும்,’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
* கவுன்சில் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். கானம்: திருவனந்தபுரம் மாநகராட்சி பதவியேற்பு விழாவில் பாஜக கவுன்சிலர்கள் ஆர்எஸ்எஸ் கீதம் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘வைப வித் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் மு.க.ஸ்டாலின் இளைஞர்களுடன் உரையாடுகிறார். தமிழ்நாட்டில் உள்ள இளம் வாக்காளர்களை இலக்காகக் கொண்டு, ‘வைப வித் ஸ்டாலின்’ என்ற ஒரு புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்க உள்ளார். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் நாட்களில் ஸ்டாலின் மாநிலம் முழுவதும் உள்ள இளைஞர்களுடன் உரையாடுவார்.
– குடந்தை கருணா
