வல்லம், டிச. 23- பெரியார் பாலி டெக்னிக்கில் மாணவர்களுக்கான தெருநாய்கள் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 17.12.2025 அன்று இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் தெருநாய்களை அகற்றி கட்டுப்படுத்துதலில் ஒரு முன்னெடுப்பாக, தொழில்நுட்பக் கல்வி இயக்கம் (DOTE, Chennai) வழிகாட்டுதலின் படி தெருநாய்கள் மேலாண்மைப் பற்றிய விழிப்பணர்வு முகாம் Students Service மற்றும் NSS சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வல்லம், கால்நடை மருத்துவமனையின் கால்நடை மருத்துவர் டாக்டர் E.தாமோதரசெல்வம், B.V.Sc. & A.H. தெருநாய்கள் பற்றிய விழிப்புணர்வு பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவர் உரையாற்றும் போது பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள். இரயில் நிலையங்கள், பேரூந்து நிறுத்தங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் ஆகிய பொது இடங்களில் உள்ள தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி (Animal Birth Control(ABC)) போடப்பட்ட பிறகு காப்பகங்களில் பராமரித்தல், அந்த விலங்குகளை துன்புறுத்தலுக்கு உட்படுத்தக் கூடாது என்றும், கழிவு உணவுகளை தெருநாய்களுக்கு அளிப் பதில் உள்ள மேலாண்மை, தெருநாய்கள் கடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கைகள், தெருநாய்கள் கடித்தால் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ முறைகள், Rabies நோய் தொற்று, வீட்டு நாய்களை வளர்ப்பில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார மற்றும் ஆரோக்கிய முறைகள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும், விரிவாகவும் எடுத்துரைத்தார். மற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கத்தை யும் அளித்தார்.
இந்நிகழ்வில் முன்னதாக இக்கல்லூரி முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி வரவேற்புரையாற்றினார். மற்றும் துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா கால்நடை மருத்துவர் டாக்டர் இ.தாமோதரசெல்வம்அவர்களைப் பற்றி அறிமுக உரையாற்றினார். மேலும் முதன்மையர் ஜீ.இராஜராமன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் Nodal Officer எஸ்.மைக்கேல்ராஜ், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
