மாமல்லபுரம், டிச.23 தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட ஆற்காடு நவாப் முகமது அலி, தமிழ்நாட்டின் பாது காப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பாராட்டிப் பேசினார்.
உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கான விழாக்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று (22.12.2025) கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்ற ஆற்காடு நவாப் முகமது அலி உரையாற்றுகையில்:
‘திராவிட மாடல்’ அரசின் சிறப்பு களைப் பட்டியலிட்டார்.
ஆற்காடு நவாப் குடும்பம் 340 இந்து கோயில்களையும், 100-க்கும் மேற்பட்ட தேவாலயங்களையும் கட்டியுள்ளோம். அந்த ஒற்றுமை இன்றும் தொடர்கிறது.
எந்த மத நம்பிக்கையையும் மதிக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. குறிப்பாகப் பெண் களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பாதுகாப்பான மாநிலம் இது. இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி மாநிலமாகத் தமிழ்நாடு உருவெடுத் துள்ளது என்று கூறினார்.
தமிழ்நாட்டில் பெண்கள் பாது காப்பாக உள்ளனர். இந்தியாவில் பொருளாதாரத்தில் சிறந்த மாநிலம் என்று த.வெ.க மேடையில் கூறியது விஜய்க்கும் அவர்களது கட்சி மூத்த நிர்வாகிகளுக்கும் நெருடலை ஏற் படுத்தியது. முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட் கார்ந் திருந்தனர்.
