டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கீழடி வரலாற்றை மறைக்க ஒன்றிய அரசு முயல்கிறது. பொருநை, தமிழரின் பெருமை. இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு, தெற்கில் இருந்து தான் எழுதப்பட வேண்டும் என்ற நமது கூற்றுக்கு இது சான்றாக உள்ளது. :- முதல்வர் மு.க.ஸ்டாலின்
* மதச்சார்பின்மை, ஒற்றுமை என்ற சொற்கள் பாஜகவுக்கு பிடிக்காது 100 நாள் வேலை திட்டத்தின் உண்மையான நோக்கத்தை ஒன்றிய அரசு அழித்து விட்டது: மாற்றங்களை திரும்ப பெற வைப்போம், நெல்லை அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வாக்காளர் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் தேசிய குடியுரிமை பதிவேட்டை மறைமுகமாக மோடி அரசு கொண்டு வருகிறதோ? என தலையங்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தலைநகர் டில்லியில், கடவுள் குறித்த விவாதம் உரையாடல்: புது டில்லியில், பத்திரிகையாளர் சவுரப் திவேதியால் நெறிப்படுத்தப்பட்ட கடவுளின் இருப்பு குறித்த விவாதத்தின் போது, பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் இஸ்லாமிய அறிஞர் முப்தி ஷமாயில் நத்வியுடன் விவாதம் நடைபெற்றது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தைத் தேடி அலைபவர்களுக்கு, நமது ஆய்வுகள் தெரிவதில்லை. நம் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது. ஈராயிரம் ஆண்டுகால சண்டையில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம். அதற் காகத்தான் அருங்காட்சியகங்களை அமைத்து வருகிறோம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
தி இந்து:
* மோதலைத் தூண்ட சங்க பரிவார் முயற்சிப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ரூ.600 கோடிக்கு கூடுதல் வருமானம் ரயில் கட்டணம் உயர்கிறது: 26ஆம் தேதி முதல் அமல், ஒரே ஆண்டில் இரு முறை உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி. ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக, இந்திய ரயில்வே டிசம்பர் 26 முதல், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஏசி மற்றும் ஏசி அல்லாத பெட்டிகளுக்கான கட்டணங்களை கிலோமீட்டருக்கு 2 பைசா வரையிலும், பொது வகுப்பு கட்டணங்களை கிலோமீட்டருக்கு 1 பைசா வரையிலும் (215 கி.மீ.க்கு மேற்பட்ட தூரங்களுக்கு) உயர்த்துகிறது.
< ஒன்பது கார்ப்பரேட் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.3811 கோடி நிதி வந்துள்ளது. இதில், பாஜகவுக்கு மட்டும் ரூ.3112 கோடி (82 சதவீதம்) கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் கடந்த 2024ஆம் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது காசோலைகள் மற்றும் இணையவழி பரிவர்த்தனைகள் மூலம் மட்டுமே எந்த ஒரு நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கும் நிதியளிக்க முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.
– குடந்தை கருணா
